கேரளாவின் வயநாட்டில், 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்த பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. 1.05 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில், அதிகாரிஅக்ள் கயிறு மற்றும் வலை ஆகியவற்றை பயன்படுத்தி அந்த பெண்ணை பத்திரமாக கீழ் இருந்து மேலே தூக்கியுள்ளனர்.
மேலும் படிக்க : ஒருவேளை 5 ஆந்தைகள் ஒன்றாக இருந்தால் இப்படித் தான் இருக்குமோ? வைரல் வீடியோ
அந்த பெண் ஏன் விழுந்தார் என்ற காரணமும் தெரியவில்லை. அதே போன்று அப்பெண்ணிற்கு காயம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்றும் தெரியவில்லை. ஆனால் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அந்த பெண்ணால் நிலையாக நடக்க முடிந்தது. உண்மையில் இவர்கள் தான் காக்கும் தெய்வங்கள் என்று தீயணைப்புத் துறையின் சேவையை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
என்னா அடி! ரொம்ப கோவக்கார “மம்மியா” இருப்பாங்க போல – வைரல் வீடியோ
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil