Trending viral video of Monitor lizard : மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே நேற்று கரையை கடந்தது யாஸ் புயல். இந்த புயலின் காரணமாக அவ்விரு மாநிலங்களிலும் கனத்த மழை பெய்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் மற்றும் கனமழை காரணமாக மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட அம்பன் புயலில் கஸிரங்கா உயிரியல் பூங்காவில் இருந்து காண்டாமிருகங்கள் தப்பி ஓடியதைப் போன்று தற்போது பெங்கால் ராட்சச பல்லி என்று கூறப்படும் water monitor lizard குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்சிகள் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : பறவைகளை வேட்டையாடும் மீன்கள்; மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்
ஐ.எஃப்.எஸ் அதிகாரி ப்ரவீன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த ராட்சச பல்லியின் வீடியோவை பதிவிட்டு அதில், கொல்கத்தாவில் உள்ள டம்டம் பகுதியில் இந்த பல்லி காணப்பட்டது என்றும், யாரும் அதன் அருகில் செல்லவோ, கொலை செய்யவோ முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் இது போன்ற வன உயிரினங்களை நீங்கள் காண நேரிட்டால் உடனே வனத்துறையினர் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க : கட்டுக்கடங்காத யாஸ்; கவலை ஏற்படுத்திய சூறாவளி… வைரல் வீடியோ
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil