New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/garbage-truck_1200_twt.jpeg)
ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை ட்விட்டரில் பார்வையிட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ளனர்.
Trending viral video of sanitation worker saving a child : சாலைகளை கடக்கும் போது எவ்வளவு தான் பாதுகாப்பாக இருக்க முயன்றாலும் சில நேரங்களில் விதி வலியதாக செயல்பட்டுவிடும். சில நேரங்களில் நம்முடைய நல்ல நேரம் நாம் நூலிழையில் உயிர் பிழைத்திருப்போம். இப்படியான உறைய வைக்கும் நிகழ்வுகள் வீடியோவாக சி.சி.டி.வியில் பதிவாவதும், பிறகு சமூக வலைதளங்களில் வைரலாவதும் நம் அன்றாட நிகழ்வில் ஒன்று போல் மாறிவிட்டது.
கல்யாணத்திற்கு நடனமாடிக் கொண்டே வருவது பழைய ஸ்டைல்; காவல்துறையினருடன் வருவது தான் புது ஸ்டைல்
தன்னுடைய வீட்டுக் கதவை தாத்தா ஒருவர் மறதியாக திறந்து வைத்துவிட்டு செல்ல, வெளியே ஓடிய சிறுவன், வலது புறம் வரும் காரை பார்க்காமல் வேகமாக ஓடினான். அப்போது இடது பக்கத்தில் இருந்து சென்ற குப்பை சேகரிக்கும் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர், சற்றும் யோசிக்காமல் அந்த சிறுவனை கையைப்பிடித்து இழுத்து மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
If you’ve already seen a sanitation worker save a little boy’s life today just keep on scrolling… https://t.co/lVG44aSnco
— Rex Chapman🏇🏼 (@RexChapman) September 5, 2021
“மது குடிப்பவர்களுக்கு உணவு மானியம் இல்லை” – என நான் கூறவில்லை; மறுப்பு தெரிவித்த ரதன் டாட்டா
ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை ட்விட்டரில் பார்வையிட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்தும் அந்த பணியாளரின் துரித முடிவு குறித்தும் பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்ததோடு, அவரின் துணிவை பாராட்டியும் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.