உணவுச் சங்கிலியில் ஒன்றை அண்டி தான் மற்றொரு உயிர் வாழ வேண்டியது இருக்கிறது. தகுந்தவை தப்பிப் பிழைக்கும் என்பது அனைத்து விலங்குகளுக்கும் பொருந்தும் கோட்பாடு தான். வட துருவங்களில் உணவு என்பதே மிகவும் அரிதானது. பனி காலங்களும் அதற்கு பிறகான காலங்களிலும் உணவு என்பது சவாலான ஒன்றாகவே இருக்கிறது.
மேலும் படிக்க : பாகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் யானை; வைரலாகும் வீடியோ
துருவப் பகுதிகளில் வாழும் கனிஸ் லூப்பஸ் (Canis Lupus) என்ற ஓநாய் வைகள் தங்களின் உயிரைக் காக்க, அடுத்த பனிக்காலம் வருவதற்குள் தங்களின் குட்டிகளை நன்றாக வளர்க்க கடுமையாக வேட்டையாட வேண்டிய நிலை ஏற்படும். அப்படியான ஒரு சூழலை தி ஹண்ட் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது பி.பி.சி. எர்த் இன்ஸ்கிராம் பக்கம்.
உணவுக்காகவும் தன்னுடைய வருங்கால சந்ததியினருக்காகவும் முயலை துரத்துகிறது ஒரு ஓநாய் கூட்டம். ஆனால் இந்த வாழ்வை வாழ்ந்தே தீர வேண்டும் என்ற உயிர் பயத்தில் ஓடுகிறது முயல் ஒன்று. இறுதியில் யார் வென்றார்கள் என்பதை மிகவும் சுவாரசியமாக சொல்கிறார் வர்ணனையாளர் டேவிட் ஆட்டன்பர்க்.
மேலும் படிக்க : கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கங்கப்பா! புலியின் வழியை மறைத்து வீடியோ எடுத்த இளைஞர்கள்
இதில் சுவாரசியம் என்னவென்றால் ஓநாய்களின் குட்டிகள் வளர ஓநாய்களின் அம்மாக்கள் மட்டும் இல்லாமல், குட்டி ஓநாய்களின் உறவுகள் அனைத்தும் ஒன்றாய் வேட்டையாடுமாம். கனிஸ் லூப்பஸ் வகை ஓநாய்கள் வட அமெரிக்கா மற்றும் யூராசியா பகுதிகளில் அதிகமாக வாழும் விலங்குகள் ஆகும். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து 1 நாள் கூட முழுமை அடையாத நிலையில் 11 லட்சம் நபர்கள் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil