இந்த உலகில் விசுவாசமான ஒரு உயிரினம் இருக்கும் என்றால் அது நிச்சயம் நாய்கள் தான். வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு மட்டும் அந்த உணர்வுகள் இருப்பதல்ல. பொதுவாக தெருக்களில் நாம் என்றேனும் ஒரு நாய்க்கு உணவு அளித்தால் கூட அடுத்த நாள் நம்மை காணும் போது மிகவும் பாசத்துடன் நம்மை அணுகும் ஒரு ஜீவன். வாழ்வில் மகிழ்ச்சியின் அர்த்தம் என்பதை அறிய ஒரு முறையேனும் ஒரு நாய்க்குட்டியை வளர்த்து பாருங்கள்.
மேலும் படிக்க : தலைகீழாக நின்று உடற்பயிற்சி; வீடியோவில் ஊரை ஏமாற்றிய நடிகை ஆர்த்தி
இன்று வைரல் வீடியோ செக்சனில் நாம் காண இருக்கும் இந்த வீடியோவில் ஒரு செல்லப் பிராணிக்கு இவ்வளவு கவனிப்பா என்று தோன்றும். அந்த அளவிற்கு படு ஜோராக சோஃபா செட்டில் படுத்துக் கொண்டிருக்கிறது அந்த நாய். அந்த நாயை வளர்த்து வரும் அம்மா, அந்த நாய்க்கு தேவையான உணவை தட்டிலே வைத்து பிசைந்து, ஊட்டி விடுகிறார். இந்த வீடு எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடிச்சு மொதல்ல அந்த வீட்டுக்கு தான் போகனும்னு நெட்டிசன்ஸ் அவ்ளோ ஃபீல் பன்றாங்க.
இது போன்ற பல வைரல் வீடியோக்களை பார்க்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“