ஆண்கள் நிர்வாணமாக தோன்றிய ஆடை விளம்பரம்: “இதுதான் பெண்கள் முன்னேற்றமா?”

ஆண்களை நிர்வாணமாக சித்தரிப்பது பெண்கள் முன்னேற்றம், பெண்ணியம் அல்ல என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆண்களை நிர்வாணமாக சித்தரித்து ஆடை நிறுவனம் ஒன்று விளம்பரம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விளம்பரங்களில் பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கும் நிலையில், அதற்கு எதிராக ஆண்களை நிர்வாணமாக சித்தரிப்பது பெண்கள் முன்னேற்றம், பெண்ணியம் அல்ல என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பல இதழ்கள் மற்றும் ஆடை, காலணி உள்ளிட்ட பொருட்களின் விளம்பரங்களில் பெண்களை நிர்வாணமாக விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள் சித்தரித்து வருகின்றன. இது பெண்களை போகப்பொருளாக சித்தரிப்பதாக உள்ளது என உலகளவில் தொடர்ந்து எதிர்ப்பு குரல்கள் ஒலித்து வருகின்றன.

இந்நிலையில், இவற்றுக்கு எதிராக ஆண்களை போகப்பொருளாக சித்தரித்து விளம்பரம் வெளியிட்டால், அது பெண்ணியம், பெண்கள் முன்னேற்றத்திற்குள் சேர்க்கப்பட்டுவிடும் என நினைத்த SuisStudio என்ற ஆடை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் #NotDressingMen என்ற பெயரில் தொடர் விளம்பர பிரச்சாரங்களை முன்னெடுத்தன.

அந்த நிறுவனம் என்ன செய்தது தெரியுமா? பெண்களுக்கு கோர்ட்-சூட் அணிந்து கம்பீரமாக இருப்பதுபோன்று மாடல்களை நடிக்க வைத்தனர். அதில் பிரச்சனை இல்லை. ஆனால், ஆணாதிக்கத்துக்கு எதிராக செயல்படுகிறோம் என்று ஆண்களை நிர்வாணமாக நடிக்க வைத்திருக்கின்றனர். பெண்கள் நேர்த்தியாக உடை அணிவதில் திறமையானவர்கள் என்பதை இந்த விளம்பரம் மூலம் வெளிபடுத்த நினைத்தது அந்நிறுவனம். ஆனால், ஆண்களை நிர்வாணமாக நடிக்க வைப்பது, ஆண்களுக்கு எதிராக செயல்படுவதெல்லாம் பெண்ணியம்m அல்ல எனவும், இதுவும் பாலின பாகுபாடுதான் எனவும், பெரும்பாலான பெண்கள் இந்த விளம்பரங்களுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அதேவேளையில் அந்த விளம்பரங்களுக்கு சிலர் ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close