இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது, எப்படி எடுக்கப்பட்டது என்பது போன்ற தகவல்களை தன்னுடைய இன்ஸ்டகிராம் பதிவில் கமெண்ட் பகுதியில் லிஸ்டியாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
Viral photo of African bullfrog eats snake : பாம்பைக் கண்டால் படையே நடங்கும் என்பார்கள். உண்மை தான். மறுக்க ஒன்றும் இல்லை. ஆனால் பாம்பை உணவாக உட்கொள்ளும் ஜீவராசிகள் அந்த பெரிய உயிரை ”லெஃப்ட் ஹேண்டில்” டீல் செய்யும் போது பாவமாக தான் இருக்கிறது. பாம்பை உணவாக உட்கொள்ளும் பெரிய விலங்குகள் என்றால் ஏதோ சாதாரண விஷயம் என்று விட்டுவிடலாம். ஆனால் இங்கே தவளை ஒன்று பாம்பை விழுங்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
லிஸ்டியாண்டோ சுஹார்ட்ஜோ என்ற புகைப்பட கலைஞர் இந்தோனேசியாவில் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். ஆப்பிரிக்கன் புல் ஃப்ராக் வகையை சேர்ந்தது இந்த தவளை என்றும் அவர் இதில் குறிப்பிட்டுள்ளார். தவளைகள் பாம்பை முழுங்குவது ஒன்றும் அரிதான நிகழ்வல்ல. ஆனாலும் சில சமயங்களில் இயற்கையின் இது போன்ற அமைப்பை பார்க்கும் போது பிரமிப்பே ஏற்படுகிறது.
இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது, எப்படி எடுக்கப்பட்டது என்பது போன்ற தகவல்களை தன்னுடைய இன்ஸ்டகிராம் பதிவில் கமெண்ட் பகுதியில் லிஸ்டியாண்டோ குறிப்பிட்டுள்ளார். ஜகர்தாவில் அமைந்திருக்கும் ஒரு குக்கிராமத்தில் இந்த புகைப்படத்தை அவர் எடுத்துள்ளார். அந்த பாம்பு அதன் அருகே தவளை உள்ளது என்பதை அறியாமல் தானாக போய் சிக்கிக் கொண்டது தான் பெரும் வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil