New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/05/cats-8.jpg)
14ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று ரீதியில் அதி முக்கியத்துவம் வாய்ந்த குரோன் வென்டோஸா என்ற கிராமம் 70 ஆண்டுகளுக்கு முன்பு மின் நிலையம் அமைப்பதற்காக நீரில் மூழ்கடிக்கப்பட்டது.
Viral trending photos of underwater village of Curon re-emerges after 70 years : ஆல்பைன் மலைத்தொடர்களை ஒட்டிய, வடக்கு இத்தாலியில் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று ரீதியில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கிராமங்களில் ஒன்றாக வட இத்தாலியில், இரண்டு ஏரிகளுக்கு நடுவே குரோன் வெனோஸ்டா என்ற கிராம் இருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு 5 ஆண்டுகள் கழித்து மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் முடிவை எடுத்தது அப்பகுதி அரசு.
ஏற்கனவே ரெசியா ஏரி மற்றும் குரோன் ஏரி என்ற இரண்டு ஏரிகளையும் ஒன்றிணைத்து புதிய மின் நிலைய திட்டத்தை துவங்க முடிவு செய்தது. ஆனால் அதற்கு இடையூறாக இருந்தது குரான் வெனோஸ்டா.
மேலும் படிக்க : அல்ட்ரா மாடர்ன் தமிழ்ப்பொண்ணுங்க... அசத்தலான டூடுல்கள்
மக்களின் எதிர்ப்பை மீறியும் அந்த இரண்டு ஏரிகளையும், வெனோஸ்டா கிராமத்தை நீரில் மூழ்கடித்து புதிய ஏரி உருவாக்கப்பட்டது. ரெசியா ஏரி என்று அழைக்கப்படும் அந்த ஏரியில் தற்போது பராமரிப்பு பணி காரணமாக நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
நீர் முற்றிலுமாக வடிந்த நிலையில் பழங்கால படிக்கட்டுகள், அடித்தள அமைப்புகள், மற்றும் நிலத்திற்கு கீழே இயங்கி வந்த அறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. 2.4 சதுர மைல்கள் பரப்பளவில் உருவாக்கப்பட்ட ஏரியின் அடியில் இருந்து 14ம் நூற்றாண்டு கிராமம் வெளியே தெரிய ஆரம்பித்தை அறிந்த சுற்றுலாப் பயணிகள் அந்த இடத்திற்கு தற்போது அதிக அளவில் வருகை புரிய ஆரம்ப்பித்துள்ளனர்.
மேலும் படிக்க : இந்த நாய்க்குட்டி போல உங்களால யோகா செய்ய முடியுமா சொல்லுங்க?
வடக்கு இத்தாலியின் தெற்கு தைரோல், ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை அங்கே வசித்து வந்த மக்கள் அந்த பகுதியில் இருந்து சற்று உயரமான இடத்தில் குரோன் வெனோஸ்டா என்ற பெயரில் புதிய கிராமத்தை உருவாக்கி வாழத் துவங்கினர். நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸான குரோன் படத்தை பார்த்தும் பலர் இங்கு வந்து செல்வதுண்டு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.