ஏமி லூயிசு சாக்சன்(Amy Jackson), இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகி , திரைப்பட நடிகை ஆவார். இவர், இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி கிராமத்தில் ஜனவரி 31, 1992ல் பிறந்தார். இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொலியில் பணியாற்றியவர். ஏமி, புனித எட்வர்டு கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். பின்னர், 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற Miss Teen World 2008 போட்டியில் முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து, Miss Teen Liverpool 2010 விருதையும் பெற்றார். இது தவிர உலகளவில் 18க்கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் பெற்றுள்ளார்.
2010ல் வெளியான மதராசபட்டணம் திரைப்படம் மூலம் சினிமா துறையில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, விக்ரம், தனுஷ், விஜய், ரஜினி என பல முக்கிய பிரபலங்களுடன் நடித்துள்ளார்.
இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள எமி ஜாக்ஸன், 2018 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் மீண்டும் லண்டனுக்கு திரும்பிவிட்டார்.
அங்கு, தொழில் அதிபர் ஜார்ஜ் பனய்யோட்டோ காதலித்த ஏமி, திருமணத்திற்கு முன்பே ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தைக்கு தாயானார். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே பிரிந்துவிட்டனர்.Read More
எமி ஜாக்சனுக்கும், அவரது காதலரான ஜார்ஜ் பெனாயிட்டோவிற்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த திருமண நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து குழந்தை பிறந்த பிறகு திருமணம் செய்து கொள்ள…