scorecardresearch

Anushka shetty

அனுஷ்கா ஷெட்டி(Anushka shetty) 1981-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி, கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை ஏ.என்.விட்டல் ஷெட்டி, பொறியாளர் ஆவர். இவருக்கு இரண்டு அண்ணன் உள்ளனர். அனுஷ்கா பெங்களூரில் உள்ள மெளண்ட் கார்மேல் பள்ளியில் கல்வி பயின்றார். பின் கணினி பாடத்தில் இளங்கலை பட்டமும் பெற்றார். தான் கல்வி பயின்ற பள்ளியிலேயே ஓராண்டு ஆசிரியையாகவும் பணி செய்துள்ளார்.

பின்னர், தந்தையை வற்புறுத்தலால் யோகா பயிற்சி வகுப்பிற்கு சென்ற அனுஷ்கா, யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோக கலையை முழுமையாக பயின்று, தீட்சை பெற்று யோகாவை பயிற்றுவிக்கும் பயிற்றுநர் ஆனார். பின்னர், 2005-ம் ஆண்டு தனது முதல் திரைப்படமாக பூரி ஜகன்நாத் இயக்கத்தில் அக்கினேனி நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்தார். 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு, தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அனுஷ்கா, 2009 இல் அருந்ததி படம் மூலம் மீண்டும் தமிழில் களமிறங்கினார். அன்று முதல் தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் பயணிக்கும் அனுஷ்கா, 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படம் தவிர, Head and Shoulders, Colgate Active Salt , Intex smart phones, சென்னை சில்க்ஸ், பாண்டிச்சேரி ஸ்ரீ லக்ஷ்மி ஜூவல்லர்ஸ் மற்றும் சில்வர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுஷ்கா விளம்பர தூதுவராகவும் செயல்பட்டிருக்கிறார். TeachAIDS-எனப்படும் அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரப்பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.Read More

Anushka Shetty News

சிரிப்புதான் சிக்கலே… புதுவித நோயால் பாதிக்கப்பட்ட நடிகை அனுஷ்கா ஷெட்டி

சமீபகாலங்களாக சினிமா நடிகைகள் அரியவகை நோய்களால் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகியுள்ளது. நடிகை அனுஷ்கா தான் ஒரு புதுவிதமான நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருப்பது ரசிகர்கள் இடையே கவலையை…

Anushka Shetty, Samantha
வாழ்க்கை வரலாற்று தொடர்: வாய்ப்பை கைப்பற்றுவது அனுஷ்காவா? சமந்தாவா?

பத்ரி வெங்கடேஷ் எழுதிய ஒரு வலைத் தொடரை இயக்கவிருக்கிறார் 88 வயதான சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்.

தமிழ் சினிமா ஹீரோயின்கள்ல மேக்கப் இல்லாம யார் அழகு? – படங்கள் உள்ளே

திறமையையும், கடின உழைப்பையும் மட்டுமே கொண்ட நடிகைகளும் ஜொலித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

Prabhas about anushka shetty's positive and negative
அனுஷ்கா கிட்ட இருக்க நெகட்டிவ் விஷயம் இதான் – மனம் திறந்த பிரபாஸ்!

Prabhas – Saaho: பல்வேறு விஷயங்களைப் பற்றி ஒரே வார்த்தையில் கூறும் ரேபிட் – ஃபயர் ரவுண்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பிரபாஸ் அளித்த பதில்கள் வேடிக்கையானவை. 

Director Kodi Ramakrishna, இயக்குநர் கோடி ராமகிருஷ்ணன்
அனுஷ்காவை வைத்து பிரம்மாண்டம் படைத்த இயக்குநர் காலமானார்

அருந்ததி உள்ளிட்ட படங்களை எடுத்த புகழ்பெற்ற தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் இன்று காலமானார். டோலிவுட் திரையுலகில் பல முன்னணி இயக்குநர்களில்…

Anushka Shetty emotional moment on tv show
வந்துட்டேன் சொல்லு; திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… உடல் எடை குறைவால் ஆச்சரியப்படுத்திய அனுஷ்கா

Anushka Shetty latest weight loss photos : உடல் எடை குறைந்திருக்கும் அனுஷ்கா புகைப்படங்கள்

anushka weight gain, அனுஷ்கா
அனுஷ்கா எடை ஏன் அதிகமாச்சு? – உங்கள் கேள்வி இது தானா? அதுக்கான பதில் இங்கே உள்ளது!

சமீபத்தில் வைரலான நடிகை அனுஷ்கா படத்தை பார்த்த ரசிகர்கள், அவர் ஏன் எடை கூடிவிட்டார் என்று கேள்வி எழுப்பினர். அதற்கான பதில் தற்போது வெளிவந்துள்ளது. ஜெயலலிதாவாக மாறும்…

‘பாகுபலி 2’ லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை நகரில் இன்னமும் இந்த படத்திற்கு மாலை நேர காட்சிகளின் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் ‘பாகுபலி 2’-ன் உண்மையான வெற்றி. சத்தியமாக ராஜமவுலி…

த்ரிஷா திரையில் ஜொலிக்காதது ஏன்? மார்க்கெட் என்னாச்சு?

த்ரிஷா திறமையான நடிகை. கொடுத்த வேடத்துக்கு நியாயம் செய்யக்கூடியவர். இவரிடம் அழகும் இருக்கிறது. இளமைத் தோற்றத்திலும் குறைவில்லை. ஆனாலும், இவரால் சரியான படங்களைத் தேர்வு செய்ய முடியவில்லை.

Anushka Shetty Photos