அரவிந்த் கெஜ்ரிவால்(Arvind kejriwal) இந்திய அரசியல்வாதியும், பிரபலமான சமூக ஆர்வலரும் ஆவர். இவர் 16 ஆகஸ்ட் 1968இல் ஹரியானாவில் பிறந்தார். ஐஐடி கரக்பூரில் இயந்திர பொறியியல் படிப்பு பயின்ற அவர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர், பணியை ராஜினாமா செய்துவிட்டு, ஐஏஎஸ் பணியில் சேரும் முயற்சியிலும் ஈடுபட்டு சாதித்து காட்டினார். 1993 ல் இந்திய வருவாய் சேவையில் பணிபுரிந்தார். அதே ஆண்டு, ஐஆர்எஸ்-இல் தன்னுடன் பணிபுரிந்த சுனிதாவை 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்
1999இல் பரிவர்த்தன் இயக்கம் மூலம் ரேஷன் அட்டை ஊழலை அம்பலப்படுத்தினார். பின்னர், சமூக பணிக்காக ஐஏஎஸ் வேலையை ராஜினாமா செய்தார்.2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் தன்னை இணைந்தபோது கெஜ்ரிவால் பிரபலமடைந்தார்.
பின்னர், அன்னா ஹசாரேவுடன் இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை அரசியல்மயமாக்குகிறாரா இல்லையா என்பது குறித்து கருத்து வேறுபாடு எழுந்ததை தொடர்ந்து, சொந்தமாக ஆம் ஆத்மி என்கிற கட்சியை தொடங்கி, 2013 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அதில், 70 இடங்களில் 28 இடங்களில் வெற்றிபெற்றார். இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவுடன், டெல்லியின் முதல்வராக பதவியேற்றார். ஆனால் 49 நாட்களில் அவர் ஜன் லோக்பால் அமைக்கப்படாததைக் கண்டித்து பதவியை ராஜினாமா செய்தார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் பதினாறாவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 70 இடங்களில் 67 இடங்களை வென்றார். டெல்லியின் ஏழாவது முதலமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2020 டெல்லி சட்டப்பேரவை தேர்தலிலும் அமோக வெற்றியை பெற்ற அரவிந்த் கேஜ்ரிவால், தனது அண்டை மாநிலமான பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி பொறுப்பை பெறும் வகையில் கடினமாக உழைத்தவர்.Read More
அதிகாரிகள் கூறுகையில், இந்த நிகழ்ச்சிக்கான பேனர், போஸ்டர்களில் டெல்லி துணைநிலை ஆளுநர், மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புகைப்படம் இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் பிரதமர்…
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ விசாரணை செய்ய பரிந்துரைந்த துணைநிலை ஆளுனர்; சிறைக்கு பயப்படவில்லை என மத்திய அரசை தாக்கும் ஆம் ஆத்மி கட்சி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது சிங்கப்பூர் பயணத்திற்கான அனுமதியை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது என்று கூறியுள்ளார். முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பயணங்களை…
இலவச திட்டங்களை ரெவ்டி கலாச்சாரம் என்று பிரதமர் மோடி விமர்சனம்; அமைச்சர்களுக்கு கிடைக்கும் வசதிகள் ஏழைக்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை – கெஜ்ரிவால் பதிலடி
ஆம் ஆத்மி கட்சி அளித்த முக்கிய வாக்குறுதியான ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.கிட்டத்தட்ட 62.25 லட்சம் பேர் பயனடைவார்கள் என…
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியைப் போல தமிழகத்திலும் மாதிரிப் பள்ளிகளை உருவாக்கி வருவதாகவும், அவற்றை பார்வையிட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை…
கடந்த வாரம் டெல்லி சட்டசபையில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் குறித்து கெஜ்ரிவாலின் அறிக்கைக்கு எதிராக பாஜக இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா மற்றும் டெல்லி…
சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த ஊரான கட்கர் கலன் கிராமத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமானம் செய்து வைக்க பஞ்சாப் மாநிலத்தின் 18வது முதலமைச்சராக…
ஆம் ஆத்மி கட்சி வேறொரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான கட்டத்தில் உள்ளது. இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒரே பிராந்தியக் கட்சியாக ஆம் ஆத்மி உருவாகியுள்ளது. இதனால்,…
5 மாநில தேர்தல் முடிவுகள்; பா.ஜ.க.வின் வெற்றிக்கு ஜாதி மற்றும் மத வேறுபாடுகளைக் குறைத்து நலத்திட்டங்கள் மற்றும் அதன் பயனுள்ள விநியோக முறைகள் காரணமாக இருக்கலாம்; கெஜ்ரிவாலின்…
கோவா சட்டப்பேரவையில் பண்டாரி சமூகம் அதிகமுறை இடம்பெற்றிருந்தாலும், இதுவரை ரவி நாய்க் என்பவர் மட்டுமே அந்த சமூகத்திலிருந்து முதல்வராக பதவி வகித்துள்ளார்.
கோவாவில் பாஜக அல்லாத வாக்குகளை ஆம் ஆத்மி மட்டுமே பிரிக்கும் என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் விமர்சனத்துக்கு ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர்…
டிசம்பர் 29 அன்று, 262 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், ஜனவரி 1 அன்று எண்ணிக்கை 242 ஆக இருந்தது. இது தற்போதைய பாதிப்பு லேசானதாகவும் அல்லது அறிகுறியற்றதாகவும்…