Arvind Kejriwal

அரவிந்த் கெஜ்ரிவால்(Arvind kejriwal) இந்திய அரசியல்வாதியும், பிரபலமான சமூக ஆர்வலரும் ஆவர். இவர் 16 ஆகஸ்ட் 1968இல் ஹரியானாவில் பிறந்தார். ஐஐடி கரக்பூரில் இயந்திர பொறியியல் படிப்பு பயின்ற அவர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர், பணியை ராஜினாமா செய்துவிட்டு, ஐஏஎஸ் பணியில் சேரும் முயற்சியிலும் ஈடுபட்டு சாதித்து காட்டினார். 1993 ல் இந்திய வருவாய் சேவையில் பணிபுரிந்தார். அதே ஆண்டு, ஐஆர்எஸ்-இல் தன்னுடன் பணிபுரிந்த சுனிதாவை 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்

1999இல் பரிவர்த்தன் இயக்கம் மூலம் ரேஷன் அட்டை ஊழலை அம்பலப்படுத்தினார். பின்னர், சமூக பணிக்காக ஐஏஎஸ் வேலையை ராஜினாமா செய்தார்.2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் தன்னை இணைந்தபோது கெஜ்ரிவால் பிரபலமடைந்தார்.

பின்னர், அன்னா ஹசாரேவுடன் இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை அரசியல்மயமாக்குகிறாரா இல்லையா என்பது குறித்து கருத்து வேறுபாடு எழுந்ததை தொடர்ந்து, சொந்தமாக ஆம் ஆத்மி என்கிற கட்சியை தொடங்கி, 2013 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அதில், 70 இடங்களில் 28 இடங்களில் வெற்றிபெற்றார். இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவுடன், டெல்லியின் முதல்வராக பதவியேற்றார். ஆனால் 49 நாட்களில் அவர் ஜன் லோக்பால் அமைக்கப்படாததைக் கண்டித்து பதவியை ராஜினாமா செய்தார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் பதினாறாவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 70 இடங்களில் 67 இடங்களை வென்றார். டெல்லியின் ஏழாவது முதலமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2020 டெல்லி சட்டப்பேரவை தேர்தலிலும் அமோக வெற்றியை பெற்ற அரவிந்த் கேஜ்ரிவால், தனது அண்டை மாநிலமான பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி பொறுப்பை பெறும் வகையில் கடினமாக உழைத்தவர்.
Read More

Arvind Kejriwal News

விளம்பரங்களுக்காக செலவழித்த ரூ.163 கோடி; 10 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த கெஜ்ரிவாலுக்கு டெல்லி அரசு உத்தரவு

விளம்பரங்களுக்காகச் செய்யப்பட்ட முழுச் செலவையும் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து மாநிலக் கருவூலத்திற்குத் திருப்பி வசூலிக்குமாறு டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்ற குழு உத்தரவிட்டிருந்தது

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த ஆம் ஆத்மிக்கு உதவியது எது?

நிச்சயமாக பா.ஜ.க.வுக்கு ஒரு கடினமானப் பணி இருந்தது. இருந்தாலும்கூட, வாக்கு எண்ணிக்கை நாளில், காலையில் பா.ஜ.க ஆம் ஆத்மிக்கு பயத்தை ஏற்படுத்தியது. ஆனால், பா.ஜ.க இறுதியில் பின்வாங்கியது.

5 நாள்களில் 11 பேரணி.. கூட்ச், சௌராஷ்டிராவில் தனிக்கவனம் செலுத்தும் அரவிந்த் கெஜ்ரிவால்

7 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த போதிலும் எனது வங்கிக் கணக்கும் எனது கட்சி வங்கிக் கணக்கும் காலியாக உள்ளது. மோர்பி பால விபத்தில் குற்றவாளிகளை பாஜக பாதுகாக்கிறது…

ரூ.50 கோடி, இரவு விருந்து.. கெஜ்ரிவால் மீது சுகேஷ் குற்றச்சாட்டு.. பா.ஜ.க.,வை தாக்கும் ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சி தம்மிடம் இருந்த ரூ.50 கோடி பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

‘இசுதன் காத்வி’ வேட்பாளர் அல்ல… குஜராத் அடுத்த முதல்வர்… அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டு உள்ளார்.

2017 சட்டப்பேரவை தேர்தல்.. குஜராத், ஹிமாச்சலில் 3ஆம் இடம்பிடித்த நோட்டா

2017 சட்டப்பேரவை தேர்தலில் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நோட்டா 3ஆம் இடம் பிடித்தது.

சுகேஷ் சந்திரசேகர் கடிதம்: ஆம் ஆத்மி சத்யேந்தர் ஜெயினுக்கு பணம்; பா.ஜ.க-வின் தந்திரம் – கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சத்யேந்தர் ஜெயினுக்கு, இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனது பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, மோர்பி சம்பவத்தில் இருந்து…

பஞ்சாப் பாணியை குஜராத்தில் இறக்கும் ஆம் ஆத்மி.. முதல்வரை மக்களே தேர்வு செய்யலாம்.!

ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இதேபோன்ற முயற்சியை மேற்கொண்டது. 21,59,437 பதில்களில் 93% பேர் பகவந்த் மான் தேர்வாக இருந்தார்.

ரூபாய் தாள்களில் விநாயகர், லட்சுமி படங்கள்.. கெஜ்ரிவால் கோரிக்கை, பா.ஜ.க கலக்கம்..!

ஆம் ஆத்மி இந்து விரோத கட்சி, அர்பன் நக்ஷல் என பாஜகவினர் தாக்கிவரும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து இந்தப் பேச்சுகள் வந்துள்ளன.

ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் படங்கள்.. அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

அவரிடம் இந்த யோசனை எப்படி வந்தது என்று கேட்டபோது, தனது வீட்டில் தீபாவளி பூஜை செய்து கொண்டிருந்தபோது, தனது நினைவுக்கு வந்ததாகக் கூறினார்.

ராமர் கோவிலுக்கு இலவச பயணம்; குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி

குஜராத்தில் ஆட்சி அமைத்தால், ராமர் கோவிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்வோம்; ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு; பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாகவும் அறிவிப்பு

ஒரு கட்சிக் கூட்டம் நடத்த முடியல்.. 13 முறை இடம் மாற்றம்.. பாஜகதான் காரணம்.. அரவிந்த் கெஜ்ரிவால்

மக்களுக்கு இலவச மின்சாரம் கொடுங்கள். இல்லையென்றால் இதனை நான் செய்வேன்.

‘குஜராத் மாற்றத்தை விரும்புகிறது, விரைவில் சிசோடியா பேரணி’: அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் மாற்றத்தை விரும்புகிறது. விரைவில் மணிஷ் சிசோடியா குஜராத்தில் பேரணி செல்வார் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

ராகுல் காந்தி vs அரவிந்த் கெஜ்ரிவால்… யாத்திரையில் யார் வெற்றி பெறுவார்கள்?

காங்கிரஸ் தலைவர் தனது லட்சிய ஒற்றுமை இந்தியா யாத்திரைக்கு புறப்படும் இதே நாளில், தற்செயலாக, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் தனது ‘மேக் இந்தியா நம்பர் 1’ பிரச்சாரத்தைத்…

மாணவிகளுக்கு ரூ1000 புரட்சிகரமான திட்டம்: சென்னை விழாவில் கெஜ்ரிவால் பேச்சு

புதுமைப் பெண் திட்டம் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்குமே முன்னோடித் திட்டமாக விளங்கப்போகிறது- அரவிந்த் கெஜ்ரிவால்

சென்னையில் கெஜ்ரிவால்: திங்கட்கிழமை நிகழ்ச்சிகள் முழு விவரம்

தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் உள்பட 3 திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தடைந்தார். அவரை பள்ளிக்கல்வித்துறை…

‘பாஜகவில் இருந்து கொண்டே ஆம் ஆத்மிக்கு வேலை செய்யுங்கள்’- குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

குஜராத்தில் ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் தரப்படும், பள்ளி மாணவ-மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்படும். பாரதிய ஜனதா பணத்தில், பணமில்லாத…

3 கல்வி திட்டங்கள் தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்; நன்றி தெரிவித்து அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்

3 கல்வி திட்டங்கள் தொடக்க விழாவில் கலந்துக்கொள்ள டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்தார் மு.க.ஸ்டாலின்; நன்றி தெரிவித்து அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.