Rasi Palan 15th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 15th July Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 15th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 15th July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 15, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்கள் பணியில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க அனுமதிக்க வேண்டாம். இதனால், பாதிப்பு உங்களுக்கு தான். தடைப்பட்டு நிற்பீர்கள். உங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். உங்கள் வெற்றி உங்களை விட்டு எங்கும் சென்றுவிடாது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

இன்று உங்கள் முடிவுகள் தவறானாலும், வேறொரு சரியான நாளுக்காக காத்திருங்கள். பணியிடத்தில் சில சங்கடமான சூழல்கள் நிலவினாலும், விரைவில் சரியாகும். நண்பர்களின் ஆலோசனைகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் சுயபுத்தி அவசியம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்கள் துணையோடு சில சிக்கல்கள் இருக்கும். அவர் உங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கக் கூடும். உங்களை மனரீதியாக அது காயப்படுத்தும். ஆனாலும், உங்கள் இலக்குகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பீர்கள். உங்கள் நண்பர்களின் வார்த்தை உங்களுக்கு ஆதரவாக இருக்கும். கவலை வேண்டாம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்களை சுயபரிசோதனை செய்துக் கொள்ள இன்று ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாடுகளில் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் கூட தொலைபேசியில் பேசி உங்களது பழைய உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நிதி நிலைமையில் சிக்கல்கள் இருக்கும். ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் ஊதாரித்தனமாக செலவுகளை செய்வீர்கள். அது உங்களை மட்டும் பாதிக்காது. உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் வேதனைக்கு உள்ளாக்கும் என்பதை மறக்க வேண்டாம். அதற்கு இடம் கொடுக்காமல், உங்களுக்கான தனி வழியில் எப்போதும் போல இயங்குவீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நீங்கள் இந்த தருணத்தில் என்ன நினைக்கிறீர்கள் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. உங்களது செயல்பாடு என்னவாக இருக்கப் போகிறது, உங்களது திட்டம் என்ன என்பதை கூட யாராலும் கிரகிக்க முடியாது. உங்களை நீங்களே புரிந்து கொண்டால் தான் உண்டு.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

இன்றைய தினம் உங்களுக்கு முழுக்க முழுக்க நேர்மறை எண்ணங்களை மட்டுமே வழங்கப் போகிறது. வெளியே எந்த ஜோதிடரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார். ஆனால், அது தான் உண்மை. உங்களுக்கு என்று எவ்வளவு போதனைகள் செய்தாலும், உங்கள் வழியில் நிற்காமல் சென்றுக் கொண்டே இருப்பீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

சில சமயங்களில் உங்களது இரண்டாம் கட்ட திட்டங்கள் வெற்றிப் பெறும். அவை உங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும். மற்றவர்களுக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்களது தொலைநோக்கு பார்வை கொண்ட குணாதிசயமே உங்களின் பெரும் பலமாகும். நீங்கள் யாருக்காகவும் உங்கள் பணியை நிறுத்த வேண்டும் என்றோ, பயப்பட வேண்டும் என்றோ அர்த்தமில்லை. நாளை என்று உறுதியில்ல என்பதை அறிந்து வாழ்வீர்கள். உங்களுக்கான வளமான கட்டமைப்பை உருவாக்கும் எண்ணம் உங்களிடம் அதிகரிக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதலில் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப வினையாற்றுங்கள். உங்களது தனிப்பட்ட சிந்தனைகளை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வதே இப்போது உங்களுக்கு சிறந்தது. நீங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு விஷயம் சிறப்பாக செயல்படாத போது அங்கேயே நீங்கள் தடைப்பட்டு நிற்க வேண்டாம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

புதிய மாற்றங்களுக்காக அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். கூடிய விரைவில் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களிடமும் கேட்டும் கூட வாழ்க்கையின் அர்த்தத்தை உணர வாய்ப்பு கிடைக்காத உங்களுக்கு, இந்த தருணங்கள் படிப்பினை கொடுக்கும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மறந்தும் கூட ஒரு தவறான அடியை எடுத்து வைக்க மாட்டீர்கள். அவ்வளவு துல்லியமாகவும், நேர்மையாகவும் உங்களை பணியை செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு எது சரியென படுகிறதோ, அதைச் செய்வதில் முனைப்பு காட்டுவீர்கள். அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்பது கூடுதல் பிளஸ்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Horoscope news in Tamil.

Web Title:

Rasi palan 15th july

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close