டி.என்.யு.எஸ்.ஆர்.பி. என அழைக்கப்படுகிற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசின் உள்துறையின் கீழ் இயங்கும் ஒரு அரசு அமைப்பு ஆகும். காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட மாநில அரசின் பாதுகாப்புப் பணிகளுக்கு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை தேர்வு செய்வது இதன் பணி.

இதன் தலைமை அலுவலகம், சென்னை புதுப்பேட்டையில் ஆதித்தனார் சாலையில் அமைந்திருக்கிறது.