State Bank of India Gold Fixed Deposit Scheme: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, R-GDS எனும் நிலையான தங்க வைப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், வழக்கமான சேமிப்புத் திட்டத்தை விட, அதிக விகிதத்திலான வட்டியை முதலீட்டாளர்கள் பெற முடியும். R-GDS திட்டம் மூலம், பாதுகாப்பான மற்றும் வருமானமிக்க வட்டியை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என SBI வங்கி தெரிவித்துள்ளது.
SBI வங்கியின் R-GDS தங்க வைப்பு நிதி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய 10 அம்சங்கள்:
இந்தியாவில் வசிக்கும் நபர்கள், அதாவது தனி நபர்கள், உரிமையாளர் மற்றும் கூட்டு நிறுவனங்கள், HUFs எனும் ஹிந்து கூட்டுக் குடும்பம், பரஸ்பர நிதிகள் / செபியின் கீழ் பதிவு செய்யப்பட்ட பரிமாற்ற வர்த்தக நிதிகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை இந்த SBIன் R-GDS தங்க வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம்.
படியுங்கள்..வங்கிகளிடம் கவனம் தேவை: இதற்கெல்லாம் நீங்கள் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும்!
2. இந்த திட்டத்தை தொடங்க, குறைந்தபட்சம் 30 கிராம் தங்கத்தை வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சம் டெபாசிட் செய்ய எந்த வரம்பும் கிடையாது.
படியுங்கள்.. டாப் 3 வங்கிகள் ஏ.டி.எம் சேவைக்கு உங்களிடம் வசூலிக்கும் கட்டணம்!
3. SBIன் R-GDS திட்டத்தில் மூன்று வகையான டெபாசிட் முறை உள்ளது:
குறுகிய கால வங்கி டெபாசிட் (STBD): குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள்.
நடுத்தர கால அரசு டெபாசிட் (MTGD): இதன் காலக்கட்டம் 5-7 ஆண்டுகள். இந்த வைப்பு, மத்திய அரசின் சார்பாக வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படும்.
நீண்ட கால அரசு டெபாசிட் (LTGD): இதன் காலக்கட்டம் 12-15 ஆண்டுகள். இந்த வைப்பு, மத்திய அரசின் சார்பாக வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படும்.
4. தங்கக் கட்டிகள், தங்க காசுகள், நகைகள் ஆகிய வடிவத்தில் தங்கம் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால், தங்க கல் மற்றும் இதர வடிவத்தில் தங்கம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
5. குறுகிய கால வங்கி டெபாசிட்(STBD) கீழ் முதல் வருடத்தில் 0.50 சதவிகிதம் வட்டி. 2வது வருடத்தில் 0.55 சதவிகிதம் வரை வட்டி. மூன்று வருடத்தில் 0.60 சதவிகிதம் வரை வட்டி கிடைக்கும். நடுத்தர கால அரசு டெபாசிட் (MTGD) மூலம், 5-7 ஆண்டுகளுக்கு, வருடத்திற்கு 2.25 சதவிகதம் வட்டி கிடைக்கும். நீண்ட கால அரசு டெபாசிட் (LTGD) மூலம், 12-15 ஆண்டுகளுக்கு, வருடத்திற்கு 2.50 சதவிகதம் வட்டி கிடைக்கும்.
பிள்ளைகளின் வருங்காலத்திற்கு பணம் சேர்க்க மிகச் சிறந்த திட்டம் எது தெரியுமா?
6. MTGD மற்றும் LTGD அம்சத்தை பொறுத்தவரை, அசல் தொகை தங்கமாக நிர்ணயிக்கப்படுகிறது. இருப்பினும், வட்டித் தொகையை ஒவ்வொரு வருடமும் மார்ச் 31 அன்று ரூபாயில் செலுத்தலாம்.
7. இந்த திட்டத்திற்கான வட்டி, டெபாசிட் செய்யும் தங்கம் வர்த்தகம் செய்யப்படும் தங்க கட்டிகளாக மாற்றும் தேதியில் இருந்து கணக்கிடப்படும்.
8. SBIன் R-GDS திட்டத்தின் கீழ், டெபாசிட் செய்பவர்கள் தனிப்பட்ட பெயரில் நியமன வசதி செய்து கொள்ளலாம்.
9. STBD டெபாசிட் கீழ், முதலீட்டாளர் அசல் தொகையின் ரீபேமன்ட்டை எடுத்துக் கொள்ளலாம். அன்றைய தேதியின் படி, தங்கம் அல்லது அதற்கு ஈடான பணத்தைக் கொண்டு எடுக்கலாம். MTGD மற்றும் LTGD பொறுத்தவரை, வைப்புத் தொகை மீட்டெடுப்பு தங்கம் அல்லது அதற்கு ஈடான ரூபாய் கொண்டு மீட்கலாம். இருப்பினும், மீட்கும் போது 0.20 சதவிகிதம் நிர்வாகக் கட்டணம் வசூலிக்கப்படும்.
10. STBD திட்டத்தின் கீழ், premature payment- ட்டை ஒரு வருடம் முடிந்த lock-in காலத்திற்கு பிறகு வட்டியுடன் செலுத்திக் கொள்ளலாம். இருப்பினும், MTGD திட்டத்தில், 3 வருடங்களுக்குப் பிறகே வைப்புத் தொகையை திரும்பப் பெற முடியும். அதேபோல், LTGD திட்டத்தில், 5 வருடங்களுக்குப் பிறகே வைப்புத் தொகையை திரும்பப் பெற முடியும்.
மேலும் படிக்க - எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு வழக்கும் அல்டிமேட் திட்டங்கள் என்னென்ன?