/tamil-ie/media/media_files/uploads/2020/01/image-94.jpg)
Periyar University November Exam Result : சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியானது. தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மாணவர்கள் periyaruniversity.ac.in என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தில் சென்று பார்க்க வேண்டும்.
பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் முக்கிய பல்கலைக்கழகம்! இது சேலத்தை மையமாகக் கொண்டு இயங்குகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இதன்கீழ் இயங்குகின்றன.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு நீங்களாகவே தயாராவது எப்படி ?
2019ம் ஆண்டு நவம்பரில் நடந்த ஒற்றைப்படை செமெஸ்டர் தேர்வு முடிவுகளை நேற்று இரவு பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டது .டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு Current Affairs பாடங்களை தயார் செய்வது எப்படி?
கடந்த சில தினங்களாக பெரியார் பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் வெளியாவதாக தகவல்கள் வந்த நேரத்தில் , நேற்று இரவு வெளியிடப்பட்டது.
periyaruniversity.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளைத்தின் முகப்பு பக்கத்தில் periyar university November என்ற லிங்கை கிளிக் செயுங்கள். பின்னர் உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை டைப் செய்தால் தேர்வு முடிவுகள் உங்கள் கணினி திரையில் தோன்றும்குரூப் I தேர்வு அறிவிப்பு வெளியீடு, 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தேர்வு முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது . முழுமையான மதிப்பெண் பட்டியல் பின்னர் வழங்கப்படும். தேர்வர்கள் தங்கள் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இந்த மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
தோல்வியுற்றவர்கள் மறு தேர்வில் பங்கேற்று இரண்டாவது முயற்சியில் தேர்வில் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும்.ஓர் கனவு, பல வாய்ப்பு : 2020 ஆண்டுக்கான அரசுத் தேர்வு பட்டியல் இங்கே
மாணவர்கள் தங்களை அரசு பணி தேர்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது தான் டிஎன்பிஎஸ்சி 2020 வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. கல்லூரி வாழ்க்கையிலே அரசு தேர்வுக்கு தயாராவது சால சிறந்தது.2019ல் யுபிஎஸ்சி-நுழைவுத் தேர்வுகளில் சாதித்த தேர்வர்களின் எழுச்சியூட்டும் கதைகள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us