இந்த வாரம் விண்ணப்பிக்க வேண்டிய மத்திய அரசு பணிகள்: லிஸ்ட் இங்கே

latest Job Recuritment News :

By: December 7, 2020, 10:34:35 PM

இந்த வாரம் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்:

ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு 2021:  ராணுவத்தில் பல்வேறு பதவிக்களுக்கு ஆட்கள் சேர்ப்பதற்கான முகாம் தெலங்கானா மாநிலம் செக்கந்திராபாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. தொழில் நுட்ப வீர ர்(ஏஇ), பொதுப் பணிக்கான வீரர், டிரேட்ஸ் மேன் வீர ர், சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் (பொதுப்பிரிவு) ஆகிய பிரிவுகளில் ஆட்தேர்வு நடைபெற உள்ளது

கூடுதல் விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இந்த வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விமானப் படைக்கு ஆட்சேர்ப்பு : இந்திய விமானப்படையில், எக்ஸ் மற்றும் ஒய் குழுவில் உள்ள விமானப்படை வீரர்கள் பிரிவில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 10 முதல், உத்தரபிரதேசம், டெல்லி, பாட்னா, உத்தரகண்ட், புதுச்சேரி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மையங்களில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும்.

கனரா வங்கி ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி ஆட்சேர்ப்பு : கனரா வங்கி காலியாக உள்ள 220 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுடைய தேர்வர்களிடம் இருந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப செயல்முறை டிசம்பர் 15ம் தேதியோடு முடிவடைகிறது. மேலும், விவரங்களுக்கு canarabank.com என்ற வலைத்தளத்தை அணுகவும்.

எஸ்பிஐ வங்கியில்  தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) :  இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தொழிற்பழகுநர் பயிற்சிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. மொத்த காலியிடங்கள் -8,500. ஆன்லைன் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  விண்ணப்பிக்க கடைசி தேதி 26.02.2018  டிசம்பர் 10. விபரங்களுக்கு sbi.co.in  என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

யுபிஎஸ்சி புள்ளியியல் அலுவலர் ஆட்சேர்ப்பு :  புள்ளியியல் அலுவலர், கண்காணிப்பாளர் (அச்சிடுதல்) ஆகிய பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு  மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புள்ளியியல் அலுவலர் பணிக்கு 35 காலியிடங்களுக்கும், கண்காணிப்பாளர் பணிக்கு 1 காலியிடங்களும் உள்ளன.

ஆர்வமும், விருப்பமும் உள்ள தேர்வர்கள் டிசம்பர் 17 அல்லது அதற்கு முன்னர் upc.gov.in அல்லது upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய தொழிலக பாதுகாப்புப் படை:  மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஏசி–க்கான (Assistant Commandants (Executive) ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்ப செயல்முறை டிசம்பர் 22ம் தேதியோடு முடிவடைகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், உயர்க் கல்வி நிறுவனத்தில்   பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத தொழிற்பழகுநர் பயிற்சிக்காக (அப்ரண்டிஸ்) விண்ணப்பங்களை வரவேற்க்கின்றது. ஆர்வமுள்ளவர்கள் iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிந்து விண்ணபிக்கலாம். மொத்த காலியிடங்கள் – 436. டிசம்பர் 19ம் தேதி வரை தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை:  பொறியியல் பட்டதாரி தகுதிப் பெற்ற தேர்வர்களுக்கு தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி) வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. 70 காலியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வரும் டிசம்பர் 12ம் தேதியோடு நிறைவடைகிறது.

குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் அந்தந்த துறையில் முழுநேர டிப்ளோமா படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கடலோரக் காவல் படை:  இந்தியக் கடலோரக் காவல் படையில், ‘நாவிக்’ என்ற பணிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை, வரும் நவம்பர் 30ம் தேதி தொடங்கி, டிசம்பர் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது .உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்டவர்கள் டிசம்பர் 7-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.joinindiancoastguard.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.

இக்னோ ஆட்சேர்ப்பு : புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் உதவி பதிவாளர், பாதுகாப்பு அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.  காலியிடங்கள் எண்ணிக்கை 22. தேர்வர்கள், டிசம்பர் 10 வரை ignou.ac.in என்ற இணையத்தளம்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Indian army iaf upsc recruitment 2020 sbi apprentice recruitment 2020

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X