AIADMK - DMK Seat Sharing Announcement Live : அதிமுக மற்றும் திமுக ஆகிய முக்கிய கட்சிகள் அவர்களின் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரங்கள் அறிவிக்க உள்ளனர்.
வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் என்று அமைச்சர் ஜெயகுமார் முன்னதாக தெரிவித்திருந்தார். அந்த வகையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நேற்று வரை அதிமுகவில் நடைபெற்று வந்தது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் 6 கட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில், 7வது கூட்டணிக் கட்சியாக த.மா.கா இணைந்துள்ளது.
அதிமுக - த.மா.கா இடையேயான கூட்டணி ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டு, அவர்களுக்கு 1 தொகுதி ஒதுக்கீடும் அதிமுக சார்பில் அளிக்கப்பட்டது. ஆக, அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்பட மொத்தம் 7 கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கிறது.
'அதிமுக கூட்டணி தொகுதிகள் விவரத்தை பின்னர் அறிவிப்போம்' - ஓ.பி.எஸ்
திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
'விவசாய கடன் தள்ளுபடி; வேலைவாய்ப்பு அதிகரிப்பு' - சுடச் சுட ராகுல் காந்தியின் பிரஸ் மீட்!
மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைத் தவிர, மற்ற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என அடையாளம் காணப்பட்டு, போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.
AIADMK - DMK Seat Sharing Announcement Live :
இந்நிலையில் இரண்டு பிரதானக்கட்சிகளும் இன்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, கூட்டணி கட்சிகளில் எந்தெந்த தொகுதி யார் யாருக்கு என்பது குறித்த அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
04:30 PM - தொடர்ந்து பேசிய ஜி.கே.வாசன், "வரும் மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் தஞ்சை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது" என்றார்.
04:10 PM - மக்களுடைய நலன் கருதி எங்கள் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது; எங்களுடைய செயல்பாட்டை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
03:10 PM - மதுரை சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது என தேர்தல் தேதியை மாற்ற கோரும் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
02:30 PM - வேலூர் தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் வேட்பாளர் குறித்த விவரம் இன்னும் இரண்டு நாளில் வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
02:00 PM - பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "அமமுக சார்பில் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். தமிழகம், புதுச்சேரியில் 19 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடும்" என்றார்.
01:15 PM - இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம்
18 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது என அக்கட்சி இன்று அறிவித்துள்ளது. அதற்கான விருப்பமனு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
01:10 PM - உடல்நலம் விசாரித்தேன்
விஜயகாந்தை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன்" என்றார். இந்த சந்திப்பின் போது அன்புமணி, ஜி.கே.மணி மற்றும் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
12:50 PM - தேர்தல் தேதி மாற்றப்படுமா?
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "மதுரை சித்திரைத் திருவிழா விவகாரத்தைப் பொறுத்தவரை, நான் எதுவும் அதிகம் பேச முடியாது. அம்மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் எனக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். அதனை நான் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பேன். அதைத் தொடர்ந்து, இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது" என்றார்.
12:35 PM : விருப்ப மனு விநியோகம்
மக்களவை தேர்தலில் போட்டியிட மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
12:15 PM : திமுக கூட்டணித் தொகுதிகள்
திமுக கூட்டணித் தொகுதிகள் குறித்த விவரம் இன்று வெளியிடப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தவிர, நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 15,16) காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு பெறலாம் எனவும், விருப்பமனுக்கள் நாளைமறுநாள் மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
11.50 AM : அதிகளவில் வாகத்தில் மக்களை அழைத்து வர தடை
தேர்தல் கூட்டங்களுக்காக வாகனங்களில் அதிக அளவிலான மக்களை அழைத்து வர தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது
11.40 AM : விஜயகாந்த் வீட்டிற்கு ராமதாஸ் வருகை
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை சந்திக்க அவரது வீட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வருகை. தேர்தல் தொகுதி பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் விஜயகாந்தை சந்திக்க அவரது வீட்டிற்கு ராமதாஸ் வந்தார்.
11.15 AM : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்க இருப்பதால், ஏப்ரல் 12ம் தேதிக்குள் அனைத்து வகுப்புகளிலும் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார்.
10.50 AM : திமுக அறிவிப்பு
வரும் 17ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிடுகிறார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரங்கள் இன்று மாலை வெளியிடப்படும் என தகவல்.
10.00 AM : விஜயகாந்தை சந்திக்கிறார் ராமதாஸ்
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்தை இன்று காலை சந்திக்கிறார், பாமக நிறுவனர் ராமதாஸ். அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம்பெற்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது. ராமதாஸ் உடன் அன்புமணியும் விஜயகாந்த்தை சந்திக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
9.00 AM : திமுக கூட்டணி தொகுதிகள் முடிவு
ராகுல் காந்தி வருகைக்கான முன்னேற்பாடு பணிகளில் காங்கிரஸ் குழுவினர் தீவிரமாக இருப்பதால், தொகுதிகளை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், இன்று பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தொகுதிகள் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
8.30 AM : அதிமுக கூட்டணி தொகுதிகள் முடிவு
கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ள அதிமுக, எஞ்சியுள்ள 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து இன்று தொகுதி விவரங்கள் அறிவிக்கப்படலாம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.