election result 2019 celebrations : நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளி வரத்தொடங்கின. மத்தியில் பாஜக அரசு பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அதே போல் தமிழகத்தில் திமுக அதிமுகவுக்கு கடும் போட்டியாக பல இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த தேர்தல் முடிவுகளால் பாஜக மற்றும் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைந்து வருகின்றனர். திமுக- வை பொருத்தவரையில் மொத்தம் 36 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.திமுக தொண்டர்கள் வெற்றியை கொண்டாட இப்போதே உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
Read more... Lok Sabha Election Results Tamil Nadu 2019 Live
இன்று காலை 6 மணி முதலே திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவிய தொடங்கிவிட்டனர். அதேபோல் ஸ்டாலின் வீட்டின் முன்பும், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் முன்பும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திமுக தொண்டர்கள் வெற்றியை கொண்டாட இனிப்புகளுடன் தயாராக உள்ளனர்.
Read more.. Loksabha election results 2019 live updates
அதே போல் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகம் நேற்று முதலே கொண்டாட்டத்தை துவங்கி விட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் வெளியான தேர்தல் முடிவில் பாஜக அரசு தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருகிறது. அதிலும் தன்னுடன் போட்டியிட்ட காங்கிரஸை விட தனிப்பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருகிறது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் டெல்லியில் பாஜக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். நேற்று முதலே லட்டு தயாடிப்பில் இறங்கிய பாஜக தொண்டர்கள் இன்று வீடு வீடாக சென்று இனிப்புகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
Tamil Nadu Assembly By Election 2019 Results Live
ஏழு கிலோவிற்கு லட்டூ கேக் தயாரித்துள்ளனர். மேலும் அதேபோன்று ஒன்பது கேக்குகளை 4 முதல் 5 கிலோ வரை செய்துள்ளனர். பாஜகவின் மைய அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி கொண்டாட்டம் துவங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் பிஜேபியின் செய்தி தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் 50 கிலோ பிஸ்தா-பாதாம் பர்ஃபியையும் கூடவே தாமரை வடிவ இனிப்புகளையும் ஆர்டர் செய்துள்ளார். கேக்கின் விலை கிலோ 1000 ரூபாயும், மற்ற இனிப்புகளின் விலை கிலோவிற்கு 2000 ரூபாயாகவும் இருக்கும் நிலையில் இந்த இனிப்புகளை பெங்காளி பேஸ்ட்ரி ஷாப்பில் பிஜேபியினர் ஆர்டர் செய்துள்ளனர்.
இந்த கொண்டாட்டத்தில் கட்சி தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை.. திமுக தான் டாப்! லேட்டஸ் அப்டேட்.