நடிகை திரிஷா, குஷ்பு, சீரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக நடிகர் மன்சூர் அலினான் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரிஷா- மன்சூர் அலிகான் சர்ச்சை
நடிகர் மன்சூர் அலிகான், “லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜா உடன் பலவந்த காட்சியில் நடித்ததுபோல் திரிஷா உடன் நடிக்க முடியவில்லை” என பொருள்படும்படி பேசியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து திரிஷா, “என் தொடர்பாக மன்சூர் அலிகான் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் என் கவனத்துக்கு வந்தது. இதில், பாலியல், பெண் வெறுப்பு, மோசமான ரசனையை நான் காண்கிறேன். அவருடன் இனி ஒரு காலமும் படம் நடிக்க மாட்டேன்” எனக் கூறினார்.
மன்னிப்பு
இந்த விவகாரத்தில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், குஷ்பு, சீரஞ்சிவி உள்பட பலரும் மன்சூர் அலிகானுக்கு ஆட்சேபம் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், மன்சூர் அலிகான் தனது செயலுக்கு வருத்தம் தெரிக்கவோ, மன்னிப்பு கேட்டவோ மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354 ஏ, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான பின்னர் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கோரினார். இந்த விவகாரத்தில் அவரது முன்ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மானநஷ்ட வழக்கு
இதற்கிடையில், குஷ்பு, திரிஷா மற்றும் சீரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நாளை (நவ.27- திங்கள்கிழமை) மானநஷ்டம் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகான் முன்ஜாமின் மனு தள்ளுபடி: அடுத்து என்ன?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“