Advertisment
Presenting Partner
Desktop GIF

ஜாக்பாட் பட அனுபவம் எப்படி? - மனம் திறக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ். ஆனந்த்குமார்

Jackpot movie : ஒரே நேரத்தில் 3 கேமராக்களை இயக்க வேண்டி இருந்தது. இப்படத்தின் ட்ரைலர் பார்த்து பலர் பாராட்டினார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jackpot, jyothika, surya, revathi, cinematography, director kalyan, ravi varma, cinematographer s.r.anandkumar, ஜாக்பாட், ஜோதிகா, ரேவதி, சூர்யா, ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். ஆனந்த்குமார். இயக்குனர் கல்யாண்

jackpot, jyothika, surya, revathi, cinematography, director kalyan, ravi varma, cinematographer s.r.anandkumar, ஜாக்பாட், ஜோதிகா, ரேவதி, சூர்யா, ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். ஆனந்த்குமார். இயக்குனர் கல்யாண்

ஜாக்பாட் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அனுபவங்களைப் பற்றி ஆர்.எஸ்.ஆனந்த் குமார் கூறியதாவது: நான் தமிழில் ‘குலேபகாவலி’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். அதன்பிறகு ஹிந்தியில் ஒரு படத்தில் பணியாற்றி வருகிறேன். அதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது.

Advertisment

தற்போது தமிழில் ஜோதிகா, ரேவதி மற்றும் இன்னும் பலர் நடிப்பில் ஆக. 2ம் தேதி (இன்று) வெளியாகியுள்ள ‘ஜாக்பாட்’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இந்த வாய்ப்பு ‘குலேபகாவலி’ இயக்குநர் மூலம் தான் கிடைத்தது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் 3 கேமராக்கள் இருக்கும். அதை ஒரே நேரத்தில் கையாள வேண்டும் என்பது தான் இப்படத்தில் சவாலாக அமைந்தது. இது இயக்குநரின் யோசனைதான். நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆகையால் குறைந்த நாட்களில் படத்தை முடிக்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் தான் ஒரே நேரத்தில் 3 கேமராக்களை இயக்க வேண்டி இருந்தது. இப்படத்தின் ட்ரைலர் பார்த்து பலர் பாராட்டினார்கள்.

Jackpot Review : ஸ்கிரீனில் தெறிக்க விட்டுடாங்க தலைவி ஜோ! ஜாக்பாட் விமர்சனம்.

இப்படம் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட்-ன் தயாரிப்பில் உருவானதால் படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்தையும் அளித்தார். இணை தயாரிப்பாளர் ராஜசேகர சுந்தர பாண்டியன் நாள் தவறாமல் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து எங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்துக் கொடுத்தார். ஜோதிகா நடிக்கும் படம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இந்த படமும் அப்படி தான். முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அதேபோல், நடிகை ஜோதிகா அவர்களை பற்றி கூறவேண்டுமானால், தன்னுடைய சொந்த தயாரிப்பாக இருந்தாலும் அந்த எண்ணம் இல்லாமல் இயல்பாகவே இருப்பார். நடிப்பில் மட்டுமல்ல, சண்டைக் காட்சிகளிலும் தன் திறமையை வெளிக் காட்டியிருக்கிறார். எப்போதும் துடிப்புடன் இருப்பார். ஒரு பாடல் காட்சியில் இடைவெளி இல்லாமல் நன்றாக நடனமாடியிருப்பார். அதேபோல், சண்டைக் காட்சியிலும் சரி, சிலம்பம் சுற்றுவதிலும் சரி தன் முழு திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

IET Exclusive : ராட்சசி மாதிரி படங்கள் பண்றதுல எனக்குப் பயம் எதுவும் இல்ல - ஜோவின் ஓப்பன் டாக்!

முதல் படத்தில் ஒரு கதாநாயகி நடித்தால் எப்படி அர்ப்பணிப்போடு நடிப்பார்களோ அதே அளவு இந்த படத்தில் ஜோதிகா நடித்திருந்தார். அவரைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. நடிகை ரேவதியும் இப்படத்தில் நடித்திருக்கிறார். மூத்த நடிகையாக இருந்தாலும் நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே செய்வார். குறித்த நேரத்தில் படிப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார். இவர்களுடன் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், மன்சூர்அலிகான் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மொத்தத்தில் இப்படம் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாகவும், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும்.

‘ஜோ’ம்ராஜ்யம்: தமிழ் சினிமாவின் புதிய அரசி!

சமீப காலங்களில் நிஜ வாழ்க்கையில் நடிகர் சூர்யாவைத்தான் கதாநாயகனாகப் பார்க்கிறேன். ஏனென்றால், திருமணமான பின்பும் தன் மனைவியை நடிக்க வைக்கிறார். பெண்களுக்கும் சமஉரிமை கொடுக்க வேண்டும் என்பதை செயல்படுத்திக் காட்டியிருக்கிறார். கார் மற்றும் புல்லட் ஓட்டுவதற்கு கற்றுக் கொடுத்ததாக இருக்கட்டும், சிலம்பம் கற்றுக் கொடுத்தாக இருக்கட்டும் அனைத்திற்கும் உடன் இருந்து உதவி புரிகிறார்.

இந்த படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து படங்கள் கைவசம் இருக்கிறது. இதை சரியாக செய்ய வேண்டும் என்று இருக்கிறேன். ஜாக்பாட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் என்னுடைய பணியைப் பற்றி பாராட்டிப் பேசியிருந்தார். இரவு பகல் பாராமல், வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் பணியாற்றியதாகப் பாராட்டினார். இந்தப் பாராட்டெல்லாம் என் குருநாதர் ரவிவர்மாவையே சாரும். ஏனென்றால், இப்படத்தை நான் வெறும் 35 நாட்களிலேயே படம் பிடித்து விட்டேன். அதுமட்டுமல்லாமல் படத்தைப் பார்த்தவர்கள் எல்லோரும் படத்தின் தரத்தை ஒப்பிடும்போது 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியதுபோல் இருக்கிறது என்று கூறினார்கள். இந்த வேகத்தையும், சுறுசுறுப்பையும் நான் என் குருநாதர் ரவிவர்மாவிடம் தான் கற்றுக் கொண்டேன். அவருக்கு நன்றி. எப்போதும் என் குருநாதரின் ஆசி வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.ஆனந்த் குமார் கூறினார்.

Jyothika Surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment