Jackpot in Tamilrockers : நேற்றைய தினம் ட்விட்டரில் விமர்சனங்களால் குவிந்த ஜோதிகாவின் ஜாக்பாட் படத்தை வெளியிட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது தமிழ் ராக்கர்ஸ். இந்த படத்தை தனது வலைப்பக்கத்தில் நேற்று இரவே தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்துள்ளன.
ஜாக்பாட் பட அனுபவம் எப்படி? - மனம் திறக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ். ஆனந்த்குமார்
ஜோதிகா நடித்த ஜாக்பாட் திரைப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியாகியது. `குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜோதிகா உடன் நடிகை ரேவதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காலை காட்சிகள் முடிந்தவடைந்த உடனே, படக் குறித்த விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் எகிறினர்.
‘ஜோ’ம்ராஜ்யம்: தமிழ் சினிமாவின் புதிய அரசி!
ஜோதிகாவின் நடிப்பை வெறித்தனமாக பாராட்டி, தலைவி, ஜோ இஸ் பேக் என பதிவிட்ட ரசிகர்கள் படம் குறித்த விமர்சனத்தை மட்டும் கலவையாகவே கூறினர். சிலருக்கு படம் மிகவும் பிடித்துள்ளதாகவும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று சிரித்து ரசிக்கலாம் என்றனர்.
Jackpot Full Movie Leaked in Tamilrockers for Free Download: சிங்கப்பெண் ஜோதிகா!
மற்ற சிலர் படத்தில் கதை எதுவே இல்லை என்றும், வெறும் ஜோதிகாவுக்காக மட்டுமே படத்தை பார்க்கலாம் என்றும் பதிவு செய்திருந்தனர். இருந்த போதும், படத்தின் வசூலை பொருத்தவரையில் முதல் நாளே நல்லதொரு தொடக்கம் என்றே கூறப்பட்டு வருகிறது. விடுமுறை தினம் என்பதால் இன்று மற்றும் நாளை ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்பட்டது.
Jackpot Review
இந்த நேரத்தில் தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா என ஒட்டு மொத்த படக்குழுவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது தமிழ் ராக்கர்ஸ். முழு படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் ஜோதிகா மிகப் பெரிய அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோவின் ஓப்பன் டாக்!