/tamil-ie/media/media_files/uploads/2019/04/442226_5511702_2_updates-12.jpg)
Kanchana 3 6th promo
Kanchana 3 Day 1 Box Office Collection: ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள காஞ்சனா 3 படம் தமிழகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.10 கோடி வரையில் வசூலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா வரிசை திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. முனி, காஞ்சனா 1,2 போன்ற படங்களைத் தொடர்ந்து தற்போது லாரன்ஸ் மீண்டும் காஞ்சனா 3 ஆம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் ரீலீஸ் ஆகியது.
ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தை திருடிய தமிழ் ராக்கர்ஸ்
Kanchana 3 Day 1 Box Office Collection: வசூலை அள்ளும் காஞ்சனா 3!
படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. படம் குறித்த விமர்சனங்களும் பாசிட்டிவாக இருந்து வருகிறது. பள்ளி மற்றும் விடுமுறை காலம் என்பதால் குடும்பத்துடன் பலரும் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றன. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.10 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவிக்கும் என்று வர்த்தக ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
விஸ்வாசம், பேட்ட... இப்போ காஞ்சனா 3- திரையுலகை கதறவிடும் தமிழ் ராக்கர்ஸ்
இந்நிலையில், இப்படம் சுமார் 10.5 கோடிகள் வரை தமிழகத்தில் வசூல் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சென்னையில் மட்டுமே ரூ 77 லட்சம் வசூல் செய்துள்ளது.மேலும், இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படங்களில் விஸ்வாசம், பேட்டயை தொடர்ந்து காஞ்சனா 3 மூன்றாவது இடத்தில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.