TamilRockers Leaked kanchana 3 Full movie In Tamil For Free Download: ராகவா லாரன்ஸ் 3 கதாநாயகிகளுடன் பட்டையைக் கிளப்பும் படம், காஞ்சனா 3. இந்தப் படத்தில் ரோஸி, காளி என இரு பேய்கள் ராகவா உடலில் புகுந்து ஆட்டம் காண்பிப்பதாக கதை இருக்கிறது. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பேய்க் கதைகளுக்கே உரிய எதிர்பார்ப்பும் சேர்ந்துகொள்ள, தியேட்டர் வசூலை பெரிதும் எதிர்பார்க்கிறது தயாரிப்பு தரப்பு. இந்தச் சூழலில் தமிழ் ராக்கர்ஸ் படத்தை முதல் நாளே ஆன் லைனில் வெளியிட்டிருப்பது அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. திரையுலகம் என்னதான் குட்டிக்கரணம் அடித்தும், தமிழ்ராக்கர்ஸை ஒழிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியவில்லை என்பதுதான் சோகம்.
Read More: Kanchana 3 Box Office Collection Day 1: மஜா-வாக பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் காஞ்சனா 3!
காஞ்சனா 3 திரைப்படம் இன்று (ஏப்ரல் 19) உலகம் முழுவதும் வெளியானது. இதில் ராகவா லாரன்ஸ், நடிகைகள் ஓவியா, வேதிகா, நிக்கி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். திகில் படமான இதற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Kanchana 3 Full Movie In Tamil Leaked By TamilRockers: காஞ்சனா 3 படத்தை திருடிய தமிழ் ராக்கர்ஸ்
காஞ்சனா 3 ரிலீஸான சில மணி நேரங்களில் ட்விட்டரில் பலரும் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ்களை அள்ளித் தெளித்தனர். ஆனால் அதற்குள்ளாக படம் ரிலிஸாகி சில மணி நேரத்தில் ஆன் லைனில் திருட்டுத்தனமாக இந்தப் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
Read More: kanchana 3 Tamil Movie: ரோஸி, யுவஸ்ரீ இவங்களையெல்லாம் தமிழ் ராக்கர்ஸில் பார்க்காதீங்க!
இதனால் காஞ்சனா 3 படத்தை ஆன் லைனில் தேடும் ரசிகர்கள் கூட்டமும் எகிறியிருக்கிறது. தேர்தல், புனித வெள்ளி, ஈஸ்டர் ஆகியவற்றையொட்டி தொடர் விடுமுறை இருப்பதால் இன்று இந்தப் படத்தை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.
Read More: Kanchana 3 Review: ரசிகர்களை குதூகலப்படுத்திய காஞ்சனா 3 விமர்சனம்!
ஆனால் படத்திற்கு வில்லன்போல தமிழ் ராக்கர்ஸ் வந்து நிற்கிறது. தியேட்டருக்கு போகிறார்களோ இல்லையோ, தமிழ் ராக்கர்ஸ் இணைய முகவரியைத் தேடி ஆன் லைனில் மொய்க்கும் கூட்டத்திற்கு பஞ்சமில்லை. பெரிய நிறுவனம், சின்ன நிறுவனம் என்கிற பேதமில்லாமல் தமிழ் ராக்கர்ஸ் இந்த அநியாயத்தை தொடர்ந்தபடியே இருக்கிறது.
Read More: Kanchana 3 Movie: விஸ்வாசம், பேட்ட… இப்போ காஞ்சனா 3- திரையுலகை கதறவிடும் தமிழ் ராக்கர்ஸ்
சில படங்கள் சார்பில் தமிழ் ராக்கர்ஸுக்கு எதிராக நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்றாலும், அதனால் எந்த நன்மைகளும் கிடைத்ததாகத் தெரியவில்லை. அந்தப் படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் ராக்கர்ஸை இணையத்தில் மொய்க்கும் ரசிகர் கூட்டம் இருக்கும் வரை, வேறு நடவடிக்கைகள் உதவுவது கஷ்டம்தான்.
தமிழ் சினிமா உலகத்தினரும் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் ராக்கர்ஸுக்கு எதிராக பேசியது போல, இப்போது பேசுவதில்லை. அதை ஒன்றும் செய்ய முடியாது என்கிற முடிவுக்கே வந்துவிட்டதாக தெரிகிறது. அதனாலேயே முன்பைவிட கெத்தாக படங்களை ஆன் லைனில் வெளியிட்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ்.
Read More: Kanchana 3 Movie: ரசிகரின் அலப்பறையைக் கண்டித்த ராகவா லாரன்ஸ்
நீதிமன்ற உத்தரவுகள், சைபர் கிரைமை கண்டறியும் டெக்னாலஜிகள் இருந்த பிறகும் தமிழ் ராக்கர்ஸ் சுடச்சுசுட புதுப்படங்களை பந்தி வைப்பதை தடுக்க முடியாதது சோகமே!