Kanchana 3 Tamil movie Shows good box office collection: காஞ்சனா 3 படத்தை ரிலீஸ் தினத்தன்றே ஆன் லைனில் வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ் மிரட்டியிருக்கிறது. அதைத் தாண்டியும் பாக்ஸ் ஆபீஸில் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 சக்கை போடு போடுகிறது. பேய்க் கதைப் படங்களுக்கு சினிமாவில் எவ்வளவு வரவேற்பு? என்பதை காஞ்சனா 4 உணர்த்தியிருக்கிறது.
ராகவா லாரன்ஸின் முனி பட வரிசையில் 4-வது படம், காஞ்சனா 3. பேய்க் கதைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பயன்படுத்தி ராகவா லாரன்ஸ் இந்தப் படங்களை எடுத்து, வெற்றி பெற்று வருகிறார்.
TamilRockers Leaked Kanchana 3 Full Movie: தியேட்டர் வசூலில் குறை வைக்காத காஞ்சனா 3
Kanchana 3 Tamil movie box office collection- காஞ்சனா 3 தியேட்டர் வசூல்
எனினும் காஞ்சனா 3 படத்தைப் பொறுத்தவரை, கடந்த 19-ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆன தினத்தன்றே ஆன் லைனில் வெளியானது. வழக்கம்போல தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், இந்தப் படத்தை தனது இணையதளத்தில் முழுமையாக திருட்டுத்தனமாக வெளியிட்டிருக்கிறது.
Read More: Kanchana 3 Box Office Collection Day 1: மஜா-வாக பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் காஞ்சனா 3!
காஞ்சனா 3 படத்திற்கு ஆரம்பத்தில் ட்விட்டர் விமர்சனங்கள் பாசிட்டிவாக வந்தன. ஆனால் மீடியாக்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்தன. தனது தாத்தா- பாட்டியின் 60-ம் கல்யாணத்திற்காக கோவை செல்லும் ராகவா லாரன்ஸ் அங்கு தனது மாமா மகள்களுடன் (ஓவியா, வேதிகா, நிக்கி) அடிக்கும் லூட்டி அருவருக்கும் அளவுக்கு இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. இதனால் முந்தைய காஞ்சனா படங்களைப் போல இதை குடும்பத்தினருடன் பார்க்க முடியவில்லை என கூறப்பட்டது.
Read More: kanchana 3 movie in tamilrockers: ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தை திருடிய தமிழ் ராக்கர்ஸ்
தவிர, லாஜிக் இல்லாமல் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தமிழ் ராக்கர்ஸ், நெகடிவ் விமர்சனங்கள் அத்தைனையையும் ஊதித்தள்ளி, தியேட்டர்களில் வசூலில் சக்கை போடு போடுகிறது காஞ்சனா 3.
Read More: Kanchana 3 Review: ரசிகர்களை குதூகலப்படுத்திய காஞ்சனா 3 விமர்சனம்!
உலகம் முழுவதும் 2600 ஸ்கிரீன்களில் காஞ்சனா 3 திரையிடப்பட்டது. சென்னையில் முதல் இரு நாட்களில் மட்டும் ஒன்றரை கோடி வரை வசூலானதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் முதல் 2 நாட்களிள் வசூல் 10 கோடியை நெருங்கியதாக தெரிகிறது. அடுத்த இரு தினங்களில் மொத்த வசூல் ரூ 28 கோடியை நெருங்கும் என்கிறார்கள்.
Read More: kanchana 3 Tamil Movie: ரோஸி, யுவஸ்ரீ இவங்களையெல்லாம் தமிழ் ராக்கர்ஸில் பார்க்காதீங்க!
பேய்ப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பே தமிழ் ராக்கர்ஸைத் தாண்டி இந்த கலெக்ஷனைக் கொடுத்திருக்கிறது. பேய்க் கதைகளுக்கு தமிழக குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் உள்ள வரவேற்பை புரிந்துகொண்டு, கில்லியாக அடித்து தூக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.