Kanchana 3 Full Movie To Free Download, leaked By Tamilrockers: பேட்ட, விஸ்வாசம், சூப்பர் டீலக்ஸ் என ஒவ்வொரு படத்தையும் ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ், ரிலீஸ் தினத்தன்றே காஞ்சனா 3 படத்தை ஆன் லைனில் வெளியிட்டது. பேய்ப் படங்களுக்கு செம வரவேற்பு இருப்பதால், ஆன் லைனில் இந்தப் படத்தை தேடும் ரசிகர்கள் கூட்டம் எகிறுவதாகவே தெரிகிறது.
Read More: kanchana 3 Tamil Movie: ரோஸி, யுவஸ்ரீ இவங்களையெல்லாம் தமிழ் ராக்கர்ஸில் பார்க்காதீங்க!
தொடர்ந்து இதேபோல தமிழ்ப் படங்களை பந்தி வைக்கும் தமிழ் ராக்கர்ஸுக்கு எதிராக திரையுலகம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. எனவே ஆன் லைனில் புதுப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து, கொழிக்கிறது தமிழ்ராக்கர்ஸ்.
Read More: Kanchana 3 Box Office Collection Day 1: மஜா-வாக பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் காஞ்சனா 3!
தமிழ் ராக்கர்ஸ் என்கிற ஒற்றை வில்லன், சினிமா உலகை ஆட்டிப் படைத்து வருகிறான். எந்தப் புதுப்படங்கள் வெளியானாலும், அதை ஆன் லைனில் வெளியிட்டு திணறடித்துவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ்.

Tamilrockers Leaked Kanchana 3 Full Movie in Online To Free Download: தமிழ் ராக்கர்ஸ் மீது என்ன நடவடிக்கை?
சூப்பர் ஸ்டாரின் பேட்ட, அஜீத்தின் விஸ்வாசம் என மெகா படங்களும் இதற்கு தப்பவில்லை. முன்பெல்லாம் படம் ரிலீஸாகி, சில நாட்கள் கழித்து ஆன் லைனில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். பிறகு அடுத்த நாள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தது. இப்போது படம் ரிலீஸாகி சில மணி நேரங்களில் ஆன் லைனில் முழுப் படத்தையும் வெளியிட்டு விடுகிறது.
Read More: Kanchana 3 Movie: ரசிகரின் அலப்பறையைக் கண்டித்த ராகவா லாரன்ஸ்
Read More: kanchana 3 movie in tamilrockers: ரிலீஸான சில மணி நேரத்தில் ஆன் லைனில் வெளியான காஞ்சனா 3
காஞ்சனா 3 , இதில் லேட்டஸ்ட் பாதிப்பு. ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகைகள் ஓவியா, வேதிகா, நிக்கி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் நேற்று (ஏப்ரல் 19) வெள்ளித் திரையைத் தொட்டது. அடுத்த சில மணி நேரங்களில் முழுப் படத்தையும் ஆன் லைனில் வெளியிட்டு பல்லாயிரக்கணக்கான சினிமாத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டியிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
Read More: Kanchana 3 Review: ரசிகர்களை குதூகலப்படுத்திய காஞ்சனா 3 விமர்சனம்!
தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க விஷால் எவ்வளவோ பேசியும் எதுவும் நடக்கவில்லை. நீதிமன்றத்தில் சென்று இதற்கான உத்தரவுகளைப் பெற்றும் நடக்கவில்லை. தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதள முகவரிகளில் சிறுசிறு மாற்றங்களை செய்து, சமூக வலைதளங்களில் அவற்றை பரவ விட்டு தொடர்ந்து ஆன் லைனில் கோலோச்சி வருகிறது.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதுப் படங்களை தரிசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விளம்பர வருமானத்தில் தமிழ் ராக்கர்ஸ் கொழிக்கிறது.