cumin seeds benefits in tamil: மசாலா மற்றும் மூலிகைகள் உணவுகளுக்கு சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், அவை எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டு வருகின்றன. எடை இழப்புக்கு உதவுவது முதல் செரிமான பிரச்சனைகளைத் தடுப்பது வரை, பல சமையலறை மசாலாப் பொருட்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. எனவே சப்ளிமெண்ட்ஸ் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஆரோக்கியமாக இருக்க இந்த அற்புதமான சமையலறை மசாலாப் பொருட்களை ஏன் நாம் பயன்படுத்தக்கூடாது?
அவ்வாறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு எளிய தீர்வு எங்களிடம் உள்ளது.
சமீபத்தில் ஊட்டச்சத்து நிபுணர் மிஷா அரோரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “காலையில் முதலில் சீரகத் தண்ணீரைக் குடியுங்கள். இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது, வீக்கத்தைத் தடுக்கிறது மற்றும் எடையைக் குறைக்க உதவுகிறது, ”என்று கூறியுள்ளார். அவ்வகையில் ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, சீரக விதை நீரில் பல நன்மைகள் உள்ளன.

சீரக விதை நீரில் கலோரிகள் குறைவு. இவை செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
சீரக விதை நீர் உடலை நச்சு நீக்குகிறது. அழற்சி எதிர்ப்பு நன்மைகளை வழங்குகிறது. மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது
சீரக விதை நீர் எப்படி தயார் செய்யலாம்?
தேவையான பொருட்கள்
சீரக விதைகள் – சிறிதளவு
தண்ணீர்
செய்முறை: ஒரு கோப்பையில் தண்ணீர் சேர்த்து விதைகளை ஊற வைக்கவும்.
எப்படி சேர்ப்பது?
தண்ணீரை வடிகட்டி, விதைகளுக்கு சூடான நீரை சேர்க்கவும்.
அது எப்படி உதவுகிறது?
நீண்ட நேரம் ஊறவைத்த பிறகு, சீரக விதைகள் வீங்கி, பயோஆக்டிவ் கலவைகளை தண்ணீரில் வெளியிடுகின்றன. இது நாம் மேலே பார்த்த நன்மைகளை அளித்தருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil