இரவு தூங்கும் முன்பு வெதுவெதுப்பான நீரில் 2 ஏலக்காய்… சூப்பரான நன்மை இருக்கு!

Cardamom (elaichi) benefits in tamil: ஏலக்காயில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, நியாசின் போன்றவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி படைத்தவையாக உள்ளன.

Cardamom (elaichi) benefits in tamil: ஏலக்காயில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, நியாசின் போன்றவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி படைத்தவையாக உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Elakkai benefits in tamil: consuming cardamom with warm water medical benefit

Cardamon benefits in tamil

Elakkai benefits in tamil: இந்திய மசாலா பொருட்களில் ஏலக்காய்க்கு என மிக முக்கிய இடம் உண்டு. சுவையும் மணமும் கொண்ட இந்த மசாலா பொருளில் எண்ணற்ற ஆரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகள் உள்ளன. மேலும், இவை நமது உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்தும் பண்புகளை பெற்றுள்ளது.

Advertisment

நம்முடைய பகுதிகளில் ஏலக்காய் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக, இனிப்பு வகைகள் செய்வதற்கும், பால் பொருட்களில் சேர்க்கவும், தேநீர், காபி, கேக் வகைகள், பிரெட் ஆகியவற்றைத் தயார் செய்வதிலும் இவற்றை நாம் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். இவை இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த அற்புத மூலிகை பொருளை நம்முடைய அன்றாட உணவில் 2 அல்லது 3 முறை சேர்த்து கொள்வதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

சளி - காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கிறது

ஏலக்காய் சளி மற்றும் காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்தாக உள்ளது. ஒரு ஏலக்காய் டீ குடித்தால் சளி, காய்ச்சல் பறந்துவிடும். இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.

publive-image
Advertisment
Advertisements

ஏலக்காய் பசியை தூண்டுவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்க நல்லதாகவும் உள்ளது. இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் 2 ஏலக்காயை போட்டு சாப்பிட்டு வந்தால் அருமையான தூக்கம் வரும்.

நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது

பருவ கால மாற்றத்தால் ஏற்படும் பல்வேறு வகையான பூஞ்சை தொற்றுக்கு ஏலக்காய் சூப்பர் மருந்தாகும். ஏனெனில் ஏலக்காயில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் சாறுகள் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும், ஆஸ்துமா இருக்கும் நோயாளிகளுக்கு இது அற்புத பயனைத் தருகிறது.

கல்லீரலை சுத்தம் செய்கிறது

ஏலக்காயில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, நியாசின் ஆகியவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி படைத்தவையாக உள்ளன. இவை ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், கல்லீரலில் இருக்கும் தேவையற்ற யூரியா, கால்சியம் மற்றும் இதர நச்சுகளை நீக்கவும் உதவுகிறது. மேலும், இவை இயற்கையாக நச்சுத்தன்மையை நீக்கி, செல்களை மீண்டும் பொலிவுபெறச் செய்வதால், மன அழுத்தம் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

publive-image

ஏலக்காய் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அருமருந்து. இதில் உள்ள ஊட்டச் சத்துகள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய் ஆன்டிஆக்ஸிடன்ட்களாகப் பயன்படுகின்றன. மேலும், இவற்றில் உள்ள டையூரிடிக் பண்புகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. தவிர, இவை உடலில் இருக்கும் செல்கள் முதிர்ச்சி அடைவதைத் தடுத்து இளமையைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

publive-image

ஏலக்காய் விதைகளில் இருக்கும், அதிக அளவிலான நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. அஜீரணக் கோளாறு, வயிற்றுப் பொருமல் மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு, ஆகியவற்றுக்கும் இவை சிறந்த தீர்வைத் தருகிறது. பயணத்தின் போது ஏற்படும், லேசான வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சினையை சமாளிக்க ஏலக்காய் உதவுகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Health Benefits Healthy Food Tips Healthy Food Health Tips Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tamil News 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: