அரிப்பு, ஒவ்வாமையை போக்கும் 'எலிக்காதிலை' கஷாயம்… இப்படி ரெடி பண்ணுங்க!
Merremia emarginata or elikkaathu ilai benefits in tamil: 'எலிக்காதிலை' கஷாயம் சாப்பிட்டு வந்தால், தலையில் ஒவ்வாமையால் ஏற்படும் அரிப்பு, பொடுகு போல் கொட்டுவது நின்று போகும்.
Merremia emarginata or elikkaathu ilai benefits in tamil: 'எலிக்காதிலை' கஷாயம் சாப்பிட்டு வந்தால், தலையில் ஒவ்வாமையால் ஏற்படும் அரிப்பு, பொடுகு போல் கொட்டுவது நின்று போகும்.
elikkaathu ilai benefits in tamil: ஒவ்வாமை நோய் இன்று மிகப்பெரிய சவாலான நோயாக இருக்கிறது. அப்படி ஒவ்வாமை சம்பந்தப்பட்ட காரணிகளை நீக்கக் கூடிய கஷாயம் எலிக்காதிலை கஷாயம். இந்த அற்புத பானத்தை எப்படி தயார் செய்யலாம் என்றும், அவற்றின் அற்புத நன்மை குறித்தும் இங்கு பார்க்கலாம்.
Advertisment
எலிக்காதிலை கஷாயம் தயார் செய்யத் தேவையான பொருட்கள்:-
கோரைக்கிழங்கு சூரணம் - 2 கிராம் திரிபலா சூரணம் - 2 கிராம் தேவதாரு சூரணம் - 2 கிராம் எலிக்காதிலை சூரணம் - 2 கிராம் முருங்கை விதை சூரணம் - 2 கிராம்.
எலிக்காதிலை கஷாயம் செய்முறை:-
Advertisment
Advertisements
மேலே கொடுக்கப்பட்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு கொதிக்க அவைத்து 100 மில்லி தண்ணீராக வற்ற விடவும். பின்னர் அதை கீழே இறக்கி வடிக்கடவும். இதை காலை ஒருவேளை உணவுக்கு முன்பும், இரவு ஒருவேளை உணவுக்கு முன்பும் என்று பருகி வரலாம்.
எலிக்காதிலை கஷாயம் பயன்கள்:-
அலர்ஜியை விரட்டும் எலிக்காதிலை கஷாயம்:
உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் ஒவ்வொரு விதமான கிருமிகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கிருமிகளுக்கு என்று சாப்பிடும் மாத்திரைகளே உடலுக்கு வினையாகப் போகும். பெரும்குடலில் இருக்கும் பாக்டீரியாக்களின் அளவு பல பில்லியன்கள் என்றும் கூட ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இந்த வகை பாக்டீரியாக்கள் உடலுக்கு நன்மையும் செய்கின்றன அதே சமயம் தீங்கையும் செய்கின்றன.
ஒருவகை பாக்டீரியாக்கள் வெளியேற்றும் அமிலம் மூளைக்கு சென்று மறதி நோய் என்று சொல்லக்கூடிய பார்க்கின்சன் நோயைக் கூட உண்டாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படியான பாக்டீரியாக்கள் கழிவுகளை வெளியேற்றி உடலுக்கு ஆரோக்கிதத்தை தர வல்லது எலிக்காதிலை கஷாயம்.
பலருக்கு எதாவது குறிப்பிட்ட உனவு வகையை சாப்பிட்டால் அலர்ஜி வந்துவிடும். மும்பையில் இருந்து 70 வயது முதியவர் ஒருவர் என்னை பார்க்க வந்து இருந்தார். அவருக்கு 30 வயதில் இருந்தே அரிசி உணவுகளை சாப்பிட்டால் அலர்ஜி வந்து விடுகிறது என்று சொன்னார். எத்தனை வருடங்களுக்குத்தான் அரசி உணவு சாப்பிடாமலே இருக்க முடியும். மற்றவைகளை சாப்பிட்டு சாப்பிட்டு எனக்கு கொம்பே முளைத்து விடும் போல இருக்கு சார். ரொம்ப மன உளைச்சலை இருக்கு என்று சொன்னார். அவருக்கு இந்த எலிக்காதிலை கஷாயத்தைத்தான் குடிக்க சொல்லி அனுப்பி வைத்தேன்.
3 மாதம் இந்த கஷாயத்தை சாப்பிட்டுவிட்டு. ஒரு இட்லி சாப்பிட்டால் அலர்ஜி வரவில்லை என்று சொன்னார். மீண்டும் இதையே குடிக்க சொல்லி, அரிசி உணவுகளை சாப்பிட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அவரது மருத்துவர்கள் கூட அவரது ரத்தத்தை பரிசோதனை செய்து, இப்போது அலர்ஜி இல்லையே என்ன சாப்பிட்டு வந்தீர்களோ அதையே தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள் என்று சொன்னதாக தெரிவித்தார். அவரது அலர்ஜி முற்றிலுமாக குணமாக இந்த எலிக்காதிலை கஷாயம்தான் காரணம்.
அரிப்பை போக்கும் எலிக்காதிலை கஷாயம்
சிலருக்கு தலை மட்டும் அரிக்கும். சொறிந்தால் அந்த இடம் காயமாக ஆகி, அதிலிருந்து பொடுகு மாதிரி கொட்டும். இதுவும் ஒரு வகை ஒவ்வாமைதான். எனவே இதற்கும் எலிக்காதிலை கஷாயத்தை வைத்து குடித்து வர நல்ல தீர்வு கிடைக்கும். கஷாயம் வைக்க தேவையான பொருட்களை எடுத்து தண்ணீர் விட்டு கலந்து ஒரு பேக்காகவும் தலையில் போட்டுக்கொள்ளலாம். உள்ளுக்கும் கஷாயம் சாப்பிடலாம். தலையில் ஒவ்வாமையால் ஏற்படும் அரிப்பு, பொடுகு போல கொட்டுவது நின்று போகும்.
ஆயுர்வேத மருத்துவர் கௌதமன்
மேலே வழங்கப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகளை வழங்கியவர் "ஆயுர்வேத மருத்துவர் கௌதமன்" ஆவர். சென்னையைச் சேர்ந்த இவர் ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக செயலாற்றி வருகிறார்.