காலையில் இதை பண்ணுங்க… வெறும் வாயில் வறுத்த எள்ளு போட்டு சுவைத்தால் இவ்வளவு நன்மை!
how sesame seeds can help one’s health immensely Tamil News: அதிகாலையில் வறுத்த எள் விதைகளை மென்று சாப்பிடும்போது, அது கல்லீரல் மற்றும் வயிற்றை தூண்டுவதோடு, செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
how sesame seeds can help one’s health immensely Tamil News: அதிகாலையில் வறுத்த எள் விதைகளை மென்று சாப்பிடும்போது, அது கல்லீரல் மற்றும் வயிற்றை தூண்டுவதோடு, செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
Different benefits of ellu or sesame seeds in tami
Ellu or sesame seeds benefits in tamil: நமது உடலில் ஏற்படுகின்ற வளர்ச்சிதை மாற்றங்களை கட்டுக்குள் வைத்திருக்க சில உணவுகளை நாம் கண்டிப்பாக உட்க்கொள்ள வேண்டும். அவை நமது உடலுக்கு வலு தருவதோடு பற்களையும் உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. அவ்வகையில், ஆயுர்வேத பாரம்பரிய முறைப்படி வறுக்கப்பட்ட எள் விதைகளை (வெள்ளை அல்லது கருப்பு) உட்க்கொண்டால் ஏரளமான ஆரோக்கிய பயன்கள் கிடைக்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Advertisment
அந்த வகையில், ஆயுர்வேத மசாஜ் தெரபிஸ்ட் நிதி ஷெத், எள் விதைகள் ஒருவரின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் என்று ஒரு விரிவான பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “வறுத்த எள் விதைகளை அதிகாலையில் மெல்லுவது பற்களை வலுப்படுத்தவும், ஈறுகள் வராமல் குறைக்கவும் உதவுகிறது. எள் விதைகளை மென்ற பிறகு பற்பசை அல்லது பற்பசை பவுடர்களை பயன்படுத்தாமல் மென்மையாக பற்களை துலக்க வேண்டும்” என்று அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
ஏன் எள் விதைகள்?
Advertisment
Advertisements
இதற்கான விளக்கத்தை அறிவியல் ரீதியிலும் காண முடியும். எள் விதைகளில் கால்சியம் நிறைந்திருப்பதால், அவை பற்கள் மற்றும் ஈறுகளைச் சுற்றியுள்ள எலும்பைப் பாதுகாக்கின்றன. பல் பற்சிப்பி உருவாக்குவதில் உதவுவதோடு, அவை பிளேக்கிலிருந்தும் பாதுகாக்கின்றன.
எள் விதைகளை மென்று சாப்பிடுவதால் வேறு சில நன்மைகள் என்ன?
அதிகாலையில் வறுத்த எள் விதைகளை மென்று சாப்பிடும்போது, அது கல்லீரல் மற்றும் வயிற்றை தூண்டுவதோடு, செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
உடலின் மொத்த ஆரோக்கியம் என்பது நம் நாளின் ஒரு முக்கிய பகுதியாகும். அது நமது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு மட்டுமல்ல, நமது செரிமான, உறுப்பு மற்றும் திசு ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியதாகும்.
எள் விதைகள் ஒரு ஆல்ரவுண்ட் ஆயுர்வேத அதிசய விதை. மேலும் அவை எலும்புகள், பற்கள் மற்றும் முடியை வலுப்படுத்த உதவுகின்றன. வயதான நபர்களுக்கு மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. அதோடு எள் விதைகள் வறட்டு மற்றும் தொடர் இருமலைத் தணிக்கவும் உதவுகின்றன என்று ஆயுர்வேத மசாஜ் தெரபிஸ்ட் நிதி ஷெத் தனது இன்ஸ்டா பதிவில் கூறியுள்ளார்.