Karupatti coffee or Palm Jaggery Coffee recipe in tamil: தலைவலி, சளி, இருமல், காய்ச்சல் போன்றவை எல்லா காலத்திலும் வரக்கூடிய நோய் தொற்றுகளாக உள்ளன. இவற்றுக்கு உடனடி நிவாரணம் தரடிக்கூடிய நாட்டு மாருந்துகள் உள்ளன. அந்த வகையில் சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மற்றும் உடனடி நிவாரணம் கொடுக்கக்கூடிய ஒரு வீட்டு வைத்திய பொருளாக கருப்பட்டி காபி உள்ளது.
கருப்பட்டி காபியில் சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை, உடலுக்கு சக்தியளிக்கவும், எலும்புகள், பற்களுக்கு உறுதியைப் பெறவும் உதவுகிறது.
கருப்பட்டி காபி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புத்துணர்ச்சியைப் பெறவும் உதவுகிறது.
இப்படியாக ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ள இந்த அற்புத காபியை எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

கருப்பட்டி காபி தயார் செய்யத் தேவையான பொருட்கள் :
கருப்பட்டி – 1/4 கப்,
காபித்தூள் – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
கருப்பட்டி காபி சிம்பிள் செய்முறை :
முதலில் கருப்பட்டியை துளாக்கி கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் காபித்தூளைப் போட்டு டிகாக்ஷன் இறங்கும் வரை கொதிக்க விடவும்.
பிறகு அதில் தூளாக்கிய கருப்பட்டியை போட்டு டிகாக்ஷன் இறங்கியதும் இறக்கி வடிகட்டவும்.
நீங்கள் விருப்பப்பட்டால் பால் சேர்த்தும் அருந்தலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“