Kattu Seeragam benefits in tamil: நம்முடைய அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்களுள் சீரகமும் ஒன்று. இதில் உள்ள இரண்டாவது வகை சீரகம் கருஞ்சீரகம். மூன்றாவது வகை காட்டு சீரகம் ஆகும். இந்த வகை சீரகம் கருமை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இவற்றை வட இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் வாசிக்கும் மக்கள் தங்களது உணவில் சேர்த்து சமைப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.
இந்த அற்புத காட்டுசீரகம் வயிறு உபாதைகள், உடல் பருமன், சயாடிகா என்று கூறப்படும் நரம்புகள் இழுத்து வலிக்கும் பிரச்சனை போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.

உடல் எடை குறைப்பு
உடல் ஏற்படும் சிறுநீரக பிரச்சனையால் கால்கள் வீங்கிவிடும். இந்த வீக்கத்தை குறைக்க ஒரு தேக்கரண்டி காட்டு சீரக சூரணம் எடுத்து, அதைத் தேனில் குழைத்து சாப்பிடலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் தேன் சேர்க்காமல், வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இது தைராய்டு சீராக சுரக்கவும் உதவுகிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காட்டு சீரகத்தை மருந்தாக சாப்பிட்டு வரலாம். சிலருக்கு வயிறு மட்டும் பானை போல இருக்கும். வாயு தொந்தரவுகள் அதிகம் இருக்கும்.இதுபோன்ற பிரச்னையை எதிர்கொள்ளும் மக்கள், காட்டு சீரகம் சூரணம் ஒரு சிட்டிகை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை பருகி வந்தாலே வயிறு குறைய ஆரம்பித்து வாயு பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அதோடு உடல் எடையும் குறையும்.
புற்றுநோய் தடுப்பு மருந்து
புற்றுநோய் வராமல் தடுக்கும் காரணிகளை உலக நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. சென்னை பல்கலைக்கழகத்தில் கூட இந்த ஆராய்ச்சி நடைப்பெற்று வருகிறது. காட்டு சீரகத்துக்கு புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி உண்டு. ரத்த குழாய் சுருக்கம், ரத்த குழாய் அடைப்பு, வெரிகோஸ் வெயின் பிரச்சனைகள் என்று எல்லாவற்றுக்கும் இது தீர்வு தரக்கூடியதாக இருக்கிறது.

மூட்டு வலி கால்களில் வீக்கம் என்றால் காட்டு சீரகத்தை மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது ரத்த குழாய் மண்டலத்தின் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தி, ரத்த குழாயின் பிரச்சனைகளைத் தீர்க்கிறது.
காட்டு சீரகத்தை தகுந்த மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்தாக எடுத்துக்கொள்வது தவறு. எனவே, உங்களுக்கு தெரிந்த ஆயுர்வேத மருத்துவரிடம் இதுபற்றிய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும்.

மேலே வழங்கப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகளை வழங்கியவர் "ஆயுர்வேத மருத்துவர் கௌதமன்" ஆவர். சென்னையைச் சேர்ந்த இவர் ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக செயலாற்றி வருகிறார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil