scorecardresearch

சுகர், கொழுப்பு குறைய… முளைத்த பயறு இப்படி செய்து சாப்பிடுங்க!

Moong Sprouts benefits and delectable recipes in tamil: 100 கிராம் முளைகட்டிய பயிரில் தாமிரம், இரும்பு, மாங்கனீசு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் துத்தநாகம் உள்ளது. அவை பொட்டாசியத்தின் நல்ல மூலமாகவும் உள்ளன.

சுகர், கொழுப்பு குறைய… முளைத்த பயறு இப்படி செய்து சாப்பிடுங்க!
Moong Sprouts benefits in tamil

Benefits of moong sprouts in tamil: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக முளைகட்டிய பயறு வகைகள் உள்ளன. இவற்றில் கலோரிகள் மிகக் குறைவு. ஆனால் தரமான ஊட்டச்சத்துக்கள் அதிகம். இவை நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தவையாகவும், குறைந்த கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாதவையாகவும் உள்ளன.

100 கிராம் முளைகட்டிய பயிரில் 30 கலோரிகள் மட்டுமே உள்ளன. இதனால், இவற்றில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

முளைகட்டிய பயறு வகைகளில் பச்சையம் இல்லாததால், செலியாக் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல உணவாகும். இவற்றில் எண்ணிக்கையிலான பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், குறிப்பாக ஃபோலேட்டுகள் மற்றும் தியாமின்கள் உள்ளன.

100 கிராம் முளைகட்டிய பயிரில் நல்ல அளவு தாமிரம், இரும்பு, மாங்கனீசு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் துத்தநாகம் உள்ளது. அவை பொட்டாசியத்தின் நல்ல மூலமாகவும் உள்ளன.

பாசிப்பயறை முளைகட்டுவது எப்படி?

முதலில் பாசிப்பயறை சுத்தமான தண்ணீரில் நன்கு நன்றாக அலசிக்கொள்ளவும். தூசி அல்லது குப்பைகள் தெரிந்தால் அவற்றை அகற்றவும்.

இப்போது அவற்றை ஒரு பாத்திரத்தில் அல்லது ஜாடியில் அறை வெப்பநிலையில் 8 முதல் 12 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

அப்படி ஊற வைக்கும்போது பாத்திரத்தின் அல்லது ஜாடியின் வாயை ஒரு துணியால் மூடவும்.

அடுத்த நாள், அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி, வெற்று, உலர்ந்த கொள்கலனில் முளைக்க சேமித்து வைக்கவும்.

இப்படி வைக்கும் போது அவற்றின் மீது சூரிய வெளிச்சம் படாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.

இதன்பின்னர், பாசிப் பயரில் வெள்ளை முனி முளைக்கத் தொடங்கும் வரை ஒரு நாளைக்கு ஒரு முறை கழுவுதல் மற்றும் வடிகட்டுதல் செயல்முறையை மீண்டும் செய்யவும். ஈரமான துணியில் சேமித்து வைத்தால், துணி ஈரமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நான்காவது நாளில், பாசிப் பயறு நீங்கள் விரும்பிய நீளத்தை அடையும். இப்போது முளைத்த பருப்பு வெவ்வேறு வகைகளில் சாப்பிட தயாராக இருக்கும்.

முளைகட்டிய பருப்பில் சுவையான ரெசிபிக்கள்:

1.முளைகட்டிய பாசிப்பருப்பு சாலட்:

இந்த சுவையான ரெசிப்பிக்கு நீங்கள் முளைகட்டிய பாசிப்பருப்பை முதலில் வேகவைக்கவும்.

பின்னர் தக்காளி, வெங்காயம், வெள்ளரி, கேரட், சிவப்பு மற்றும் பச்சை மிளகாய் மற்றும் புதினா இலைகளை நறுக்கிக் கொள்ளவும்.

தொடர்ந்து புதிதாக வெட்டப்பட்ட காய்கறிகளை முளைகட்டிய பாசிப்பருப்புடன் கலந்து, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான சாலட் பரிமாற தயாராக இருக்கும்.

  1. முளைகட்டிய பாசிப்பருப்பு சீலா:

இது தோசையை விட சற்று தடிமனாக இருக்கும் ஒரு சுவையான இந்திய பாணி பான்கேக்.

இந்த ரெசிபியை தயார் செய்ய முளைகட்டிய பாசிப்பருப்பை மிக்சியில் இட்டு நன்றாக அரசித்துக்கொள்ளவும்,

மிருதுவான மாவுக்கு தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் புதிதாக நறுக்கிய காய்கறிகளை மாவில் சேர்க்கவும்.

இதன்பின்னர், மாவை 30 நிமிடங்கள் தனியாக ஒதுக்கி வைக்கவும்.

பிறகு, நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி ஒரு நிமிடம் கடாயை சூடாக்கவும்.

கடாயில் ஒரு கரண்டி நிறைய மாவை ஊற்றி சமமாக பரப்பவும். 2 முதல் 3 நிமிடங்கள் மிதமான தீயில் சீலாவை கீழே பொன்னிறமாகும் வரை சமைக்கவும்.

பிறகு புரட்டி மற்றொரு இரண்டு நிமிடங்களுக்கு சமைக்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த சீலா தயார்.

இவற்றுடன் புதினா சட்னி சேர்த்து ருசித்து மகிழலாம்.

  1. முளைகட்டிய பாசிப்பருப்பு கட்லெட்டுகள்:

இந்த சுவையான, ஆரோக்கியமான மற்றும் நிறைவான கட்லெட்டுகளை காலை மற்றும் மாலை சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

இந்த டேஸ்டி ரெசிப்பிக்கு ஒரு பிடி வேர்க்கடலை மற்றும் ஓட்ஸை மிதமான தீயில் வறுக்கவும்.

அவை ஆறியதும், அவற்றை நன்கு தூள் போல் அரைக்கவும்.

தொடர்ந்து 2 வேகவைத்த உருளைக்கிழங்கை எடுத்து நன்கு மசித்து,முளைகட்டிய பாசிப்பருப்புகளை நசுக்கி, உருளைக்கிழங்கு மற்றும் ஓட்ஸ் பொடியுடன் நன்கு கலக்கவும்.

இந்த கலவையில் சிவப்பு மிளகாய் தூள், உப்பு, புதிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் இஞ்சி விழுது சேர்க்கவும்.

டோவிலிருந்து சிறிய அளவிலான உருண்டைகளை உருவாக்கி அவற்றை கட்லெட்டுகளாக வடிவமைக்கவும்.

ஒரு கடாயை சூடாக்கி, ஆலிவ் எண்ணெய் சேர்த்து, கட்லெட்டுகளை பொன்னிறமாகவும் மிருதுவாகவும் இருக்கும் வரை சமைக்கவும்.

இப்போது அவற்றை புதினா சட்னியுடன் பரிமாறி ருசிக்கலாம்.

முளைகட்டிய பாசிப்பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்:-

  1. இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.
  2. எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
  3. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  4. மலச்சிக்கலை எதிர்த்து, செரிமான மண்டலத்தை சிறந்த ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும்.
  5. இவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் ரத்தசோகை வராமல் தடுக்கிறது.
  6. முடி வளர்ச்சி மற்றும் பளபளப்பான சருமத்திற்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Moong sprouts to reduce cholesterol and sugar levels in tamil