Murungai Keerai poriyal in tamil: நம்முடைய ஊர்களில் வீதி எங்கும் காணப்படும் மரங்களில் ஒன்றாக முருங்கை மரம் உள்ளது. இது இந்திய துணைக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட வறட்சியைத் தாங்க கூடிய மரவகை ஆகும். இவற்றின் இலைகள் மற்றும் காய்கள் நம்முடைய அன்றாட உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. முருங்கை சாம்பாரில் சேர்க்கப்படுகிறது மற்றும் இலைகள் ரசம் மற்றும் பொரியல், கூட்டு தயாரிக்கவும் பயன்படுகிறது.
வேறு எந்த பழங்கள் அல்லது காய்கறிகளிலும் இல்லாத அளவிற்கு ஊட்டச்சத்து நன்மைகள் முருங்கையில் இருப்பதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. உதாரணமாக, முருங்கை இலைகளில் உள்ள வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட அதிகமாக உள்ளது. இதன் கால்சியம் செறிவு பாலை விட அதிகமாகும். மேலும், நமக்கு ஏராளமான மருத்துவப் பலன்களை வழங்கி வரும் இந்த மரத்தின் இலையை காய வைத்து, பொடியாக்கி காலை வேளையில் தேநீரில் கலந்து முருங்கை இலை டீயாக குடித்து வரலாம்.
முருங்கை இலைப் பொடியானது, தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கை இலையில் பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செறிந்து காணப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு டீ அல்லது காபியுடன் முருங்கை இலைப் பொடியை கலந்து உட்கொள்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
இப்படியாக ஏராளமான ஆரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகளை அள்ளித்தரும் முருங்கையில் சுவையான மற்றும் சத்தான பொரியல் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
முருங்கைக் கீரை பொரியல் தயார் செய்யத் தேவையான பொருட்கள்:-
முருங்கை இலைகள் – 1 கப்
சின்ன வெங்காயம் – 15
தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் – 3 ஸ்பூன்
உப்பு – 1/2 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
வர மிளகாய் – 3.
முருங்கைக் கீரை பொரியல் சிம்பிள் செய்முறை:-
முதலில் முருங்கை இலையைக் கழுவி அதன் இலைகளை அகற்றவும்.
பின்னர் 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை எடுத்து, நசுக்கி அதனை தனியாக எடுத்து வைக்கவும்.
இப்போது ஒரு ஒரு கடாயில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
தேங்காய் துருவலுக்கு தேவையான உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை குறைந்த தீயில் வைத்து வறுக்கவும்.
பின்னர் இவற்றை அடுப்பில் இருந்து இறக்கி மற்றொரு தட்டுக்கு மாற்றவும்.
தொடர்ந்து அதே கடாயில், 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
பிறகு கடுகு சேர்த்து தாளித்து, நசுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் 2 டீஸ்பூன் மிளகாய்த் துருவலைத் தூவி வறுக்கவும்.
இப்போது வடிகட்டிய முருங்கை இலைகளைச் சேர்த்து, மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் மூடி வைத்து சமைக்கவும்.
பின்னர் வறுத்த தேங்காய் சேர்த்து கிளறவும். இவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து மேலும் 2 முதல் 3 நிமிடங்களுக்கு மூடி வைத்து சமைக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான மற்றும் சத்தான முருங்கைக்கீரை பொரியல் தயார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.