பிரதமர் சொல்வது சரிதான்; என்ஆர்சியை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இல்லை: அமித் ஷா

பிரதமர் மோடி கூறியது முற்றிலும் சரியானது. என்ஆர்சியை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்திலோ அல்லது மத்திய அமைச்சரவையிலோ எந்தவிதமான விவாதங்களும் நடத்தப்படவில்லை

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் (என். ஆர்.சி), தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (என்.பி.ஆர்) எந்த தொடர்பும் இல்லை என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) தொடர்பாக எந்த விதமான விவாதமும் இப்போது தேவையில்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்திலும் திமுக போராட்டங்களை முன்னெடுத்தி நடத்தி வருகிறது.


கடந்த ஞாயிறன்று டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து முஸ்லிம்கள் அச்சப்படுகிறார்கள். ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதுகுறித்து விவாதிக்கவே இல்லை. மத்திய அமைச்சரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ விவாதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

ஆனால், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுக்குச் சென்ற போது என்ஆர்சி நாடு முழுவதும் கொண்டு வரப்படும் என்று பேசினார். நாடாளுமனறத்தில் பேசுகையில் கூட என்ஆர்சி நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என்று அமித் ஷா பேசினார்

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் இருவேறு கருத்துகளைக் கூறுவதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கின.

குடியுரிமை திருத்த சட்டமும் இலங்கை தமிழர்களும்! தமிழகம் சி.ஏ.ஏவை எதிர்க்க காரணம் என்ன?

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு என்ஆர்சி குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (என்ஆர்சி) தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கும் (என்பிஆர்) எந்தவிதமான தொடர்பும் இல்லை. பிரதமர் மோடி கூறியது முற்றிலும் சரியானது. என்ஆர்சியை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்திலோ அல்லது மத்திய அமைச்சரவையிலோ எந்தவிதமான விவாதங்களும் நடத்தப்படவில்லை.

என்பிஆர் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் இது தொடங்கப்பட்டு, இதை நாங்களும் தொடர்ந்து வருகிறோம். என்பிஆர் என்பது மக்கள் தொகை பதிவேடு. ஆனால் என்சிஆர் என்பது, மக்கள் தங்களைப் பதிவு செய்வதாகும். என்பிஆர் மூலம் பெறப்படும் தகவல்களை என்ஆர்சி செயல்படுத்தப் பயன்படுத்தமுடியாது. இரு பணிகளும் தனித்தனியாகவை.

ஜனாதிபதி விழாவில் கலந்து கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டேன் – புதுவை மாணவி புகார்

தேசிய மக்கள் தொகை பதிவேடு நடத்துவதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் மறுப்பு தெரிவித்துள்ளார்கள். நான் இரு முதல்வர்களிடமும் பணிவுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்காதீர்கள். அவர்கள் இருவரும் முடிவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். இருவரின் அரசியல் காரணங்களுக்காக, ஏழைகளுக்கு வளர்ச்சித் திட்டங்கள், உதவிகள் கிடைக்காமல் போய்விடும்.

எங்கள் நிலைப்பாட்டை எப்போதும் ஒவைசி எம்.பி.எதிர்கொண்டுதான் இருக்கிறார். நாங்கள் சூரியன் கிழக்கே உதிக்கும் என்றால், அவர் மேற்கே என்றுதான் கூறுவார். ஆனால் அவருக்கு உறுதியளிப்பது என்னவென்றால், குடியுரிமைச் சட்டத்தாலும், என்ஆர்சியும் எந்தவிதமான தொந்தரவும் தராது” என்று தெரிவித்தார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Amit shah interview npr wont affect anyones citizenship no talk on nrc now

Next Story
சி.ஏ.ஏ. போராட்டம் : இறந்து போன 16 நபர்களில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்!Uttar Pradesh CAA protests
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com