Advertisment

அடல் பிகாரி வாஜ்பாய் உடல் தகனம்: கட்சி பேதங்களைக் கடந்து தலைவர்கள் மரியாதை

Former Prime Minister Atal Bihari Vajpayee funeral LIVE: வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் மோடியுடன் அமித்ஷா, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட தலைவர்கள் நடந்து சென்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vajpayee funeral, Atal Bihari Vajpayee funeral , Former Prime Minister Atal Bihari Vajpayee funeral, வாஜ்பாய் இறுதி ஊர்வலம், வாஜ்பாய் இறுதி சடங்கு, வாஜ்பாய் மரணம்

Former PM Atal Bihari Vajpayee funeral LIVE: வாஜ்பாய் இறுதி சடங்கு

Atal Bihari Vajpayee funeral LIVE: அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்திலும், பின்னர் பாஜக தலைமை அலுவலகத்திலும் வைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஊர்வலத்தில் நடந்து சென்றனர். மாலையில் யமுனைக் கரையில் ஸ்மிரிதி ஸ்தல் பகுதியில் இறுதி சடங்கு நடந்தது. வெளிநாட்டுத் தலைவர்கள், கட்சி பேதமின்றி தேசத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது.

Advertisment

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். வயது 93. முதுமை காரணமான உடல்நலப் பிரச்னைகளால் சில ஆண்டுகளாக வீட்டில் ஓய்வில் இருந்தார். சிறுநீரக பாதை நோய் தொற்று காரணமாக ஜூன் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார்.

வாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல் To Read, Click Here

கார்கில் நாயகன் வாஜ்பாய் முதுகில் குத்தப்பட்ட நாள் வரலாற்றில் மறையாது! To Read, Click Here

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: அரிய புகைப்படங்களின் தொகுப்பு To Read, Click Here

வாஜ்பாய் மறைவு : சோகத்தில் மோடி; தலைவர்கள் இரங்கல் To Read, Click Here

வாஜ்பாய் எனும் சிறுவனை தேடும் கிராமம்! To Read, Click Here

சின்னப்பிள்ளை ... இவர் காலில் விழுந்து வாஜ்பாய் ஆசி பெற்ற காரணம் இது தான் To Read, Click Here

வாஜ்பாய் உடல்நிலை ஆகஸ்ட் 15 மாலையில் இருந்தே மோசமானது. ஆகஸ்ட் 16 (நேற்று) மாலை 5:05 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் மரணம் அடைந்தார். நாடு முழுவதும் அவரது மரணத்திற்கு 7 நாள் துக்கம் அனுசரிப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநிலங்கள் ஒரு நாள் (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவித்திருக்கின்றன.

வாஜ்பாய்க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Vajpayee funeral, Atal Bihari Vajpayee funeral , Former Prime Minister Atal Bihari Vajpayee funeral, வாஜ்பாய் இறுதி ஊர்வலம், வாஜ்பாய் இறுதி சடங்கு, வாஜ்பாய் மரணம் Former PM Atal Bihari Vajpayee funeral LIVE: வாஜ்பாய் இல்லத்தில் இருந்து அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டபோது

Former PM Atal Bihari Vajpayee passed away on Thursday at AIIMS Hospital, New Delhi. Vajpayee funeral LIVE Updates: வாஜ்பாய் இறுதி அஞ்சலி ‘லைவ்’ நிகழ்வுகள் இங்கே

5:15 PM: பாகிஸ்தான் உள்பட தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகள், கட்சி பேதமற்ற முறையில் தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் பலரும் பங்கேற்க வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா இறுதி சடங்குகளை நிறைவேற்றி எரியூட்டினார். மகத்தான தலைவரை 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் நாடு வழியனுப்பி வைத்தது.

4:40 PM: வாஜ்பாய் இறுதி ஊர்வலம் ஸ்மிருதி ஸ்தல் வந்தது. அங்கு கட்சி பேதமின்றி தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர்.

துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் நடந்தது.

3:45 PM: வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்த டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதாவை சந்தித்து ஆறுதல் கூறினர். திமுக தலைவர் கருணாநிதி மறைந்து 10 நாட்களே ஆன நிலையில் இவர்களைப் பார்த்த நமிதா நெகிழ்ச்சி அடைந்தார். கனிமொழியும், நமிதாவும் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து ஆறுதல் கூறிக் கொண்டது உருக்கமாக இருந்தது.

3:00 PM: வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் மோடியுடன் அமித்ஷா, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் நடந்து சென்றனர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஊர்வலத்தில் செல்கிறார்கள்.

Vajpayee funeral, Atal Bihari Vajpayee funeral , Former Prime Minister Atal Bihari Vajpayee funeral, வாஜ்பாய் இறுதி ஊர்வலம், வாஜ்பாய் இறுதி சடங்கு Former PM Atal Bihari Vajpayee funeral LIVE: வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற கூட்டத்தின் ஒரு பகுதி

2:15 PM: வாஜ்பாய் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. மோடி உள்ளிட்ட தலைவர்கள் உடன் நடந்து சென்றனர்.

2:00 PM:  வாஜ்பாய் இறுதி ஊர்வலம் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து சில நிமிடங்களில் புறப்படும் எனத் தெரிகிறது. சுமார் 5 கி.மீ பயணித்து, யமுனை ஆற்றங்கரையில் இறுதிச் சடங்கு நடக்கிறது.

Vajpayee funeral, Atal Bihari Vajpayee funeral , Former Prime Minister Atal Bihari Vajpayee funeral, வாஜ்பாய் இறுதி ஊர்வலம், வாஜ்பாய் இறுதி சடங்கு, வாஜ்பாய் மரணம் Former PM Atal Bihari Vajpayee funeral LIVE: வாஜ்பாய் இறுதி சடங்குகள் நடைபெறும் ஸ்மிரிதி ஸ்தல் பகுதியில் ஏற்பாடுகள் நடைபெறும் காட்சி: படம்: இந்தியன் எக்ஸ்பிரஸுக்காக டாஷி டோப்க்யால்

1:50 PM: பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இதற்கிடையே பிரதமர் மோடி மீண்டும் பாஜக அலுவலகம் வந்தார். பூடான் மன்னர் அஞ்சலி செலுத்தியபோது பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் அங்கு இருந்தனர்.

1:45 PM : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

1:15 PM: இலங்கை பொறுப்பு வெளியுறவு அமைச்சர் லக்‌ஷ்மன் கிரில்லா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

12:45 PM: வங்கதேச வெளியுறவு அமைச்சர் அபுல்ஹசன் மகமூத் அலி, நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் க்யாவாலி ஆகியோர் நேரில் வந்து வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர்.

12:25 PM: பாஜக மூத்த தலைவர் அத்வானி, தனது மகள் பிரதிபாவுடன் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Vajpayee funeral, Atal Bihari Vajpayee funeral , Former Prime Minister Atal Bihari Vajpayee funeral, வாஜ்பாய் இறுதி ஊர்வலம், வாஜ்பாய் இறுதி சடங்கு, வாஜ்பாய் மரணம் Former PM Atal Bihari Vajpayee funeral LIVE: பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடலுக்கு அத்வானி அஞ்சலி செலுத்தியபோது

12:15 PM: வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து கிளம்பினார். இன்று வெள்ளச் சேதத்தை பார்வையிட அவர் கேரளா செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

12:00 PM: வாஜ்பாய் உடலுக்கு பாஜக தலைமை அலுவலகத்தில் திரளான நிர்வாகிகளும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

11:20 AM: வாஜ்பாய் உடல் பாஜக தலைமை அலுவலகம் வந்து சேர்ந்தது. அங்கு காத்திருந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Vajpayee funeral, Atal Bihari Vajpayee funeral , Former Prime Minister Atal Bihari Vajpayee funeral, வாஜ்பாய் இறுதி ஊர்வலம், வாஜ்பாய் இறுதி சடங்கு, வாஜ்பாய் மரணம், அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார் Former PM Atal Bihari Vajpayee funeral LIVE: பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இறுதி அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம்

10:45 AM: பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சற்று நேரத்தில் வாஜ்பாய் உடல் பாஜக தலைமை அலுவலகம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vajpayee funeral, Atal Bihari Vajpayee funeral , Former Prime Minister Atal Bihari Vajpayee funeral, வாஜ்பாய் இறுதி ஊர்வலம், வாஜ்பாய் இறுதி சடங்கு Former PM Atal Bihari Vajpayee funeral LIVE: பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட கூட்டம்

10:15 AM: வாஜ்பாயின் உடல் அடங்கிய பெட்டியை பாஜக தலைமை அலுவலகத்திற்கு எடுத்து வந்தபோது, ஏராளமான பாஜக தொண்டர்கள் ஊர்வலமாக இணைந்து சென்றனர்.

9:45 AM: பாஜக தலைமை அலுவலகத்திற்கு சற்று நேரத்தில் வாஜ்பாய் உடல் எடுத்துவரப்பட இருக்கிறது. வாஜ்பாயை வாழ்த்தி அங்கு கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அங்கு வந்து சேர்ந்தார். நாடு முழுவதும் இருந்து பாஜக தலைவர்களும், தொண்டர்களும் அங்கு வந்து வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.

Former Prime Minister Atal Bihari Vajpayee funeral, வாஜ்பாய் இறுதி ஊர்வலம், வாஜ்பாய் இறுதி சடங்கு, வாஜ்பாய் மரணம் Former PM Atal Bihari Vajpayee funeral LIVE: வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி வந்தபோது

9:10 AM: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வாஜ்பாய் இல்லத்திற்கு வந்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

atal bihari vajpayee, Atal Bihari Vajpayee Dead Funeral Tributes, atal bihari vajpayee death, வாஜ்பாய் மரணம், அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார், வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி Former PM Atal Bihari Vajpayee funeral LIVE: வாஜ்பாய் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி

8:50 AM:பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் இறுதி அஞ்சலிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பகல் 1 மணி வரை இங்கு அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.

8:15 AM: நேற்று இரவு டெல்லி சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் வாஜ்பாய் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

atal bihari vajpayee, Atal Bihari Vajpayee Dead Funeral Tributes, atal bihari vajpayee death, வாஜ்பாய் மரணம், அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார், வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி Former PM Atal Bihari Vajpayee funeral LIVE: வாஜ்பாய் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி

8:00 AM: வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புப் பணிகளுக்கு 2000 ஆயுதப்படை காவலர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். இறுதி சடங்கு நடைபெறும் ராஷ்ட்ரிய ஸ்மிரிதி தல் பகுதியில் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

7:30 AM: தமிழகத்தில் இருந்து ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., உள்ளிட்டவர்கள் நேற்று இரவே டெல்லிக்கு கிளம்பிச் சென்றனர். இன்று காலை வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

atal bihari vajpayee, Atal Bihari Vajpayee Dead Funeral Tributes, atal bihari vajpayee death, வாஜ்பாய் மரணம், அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார், வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி Former PM Atal Bihari Vajpayee funeral LIVE: வாஜ்பாய் உடலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அஞ்சலி

7:00 AM:வாஜ்பாயின் உடல் வியாழக்கிழமை இரவே அவரது இல்லமான புதுடெல்லி, கிருஷ்ணா மேனன் மார்க்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 7:30 முதல் 8:30 மணி வரை அங்கு பொதுமக்களும், தலைவர்களும் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் - கருணாநிதி To Read, Click Here

மறக்க முடியுமா ? வாஜ்பாயின் தமிழ் பேச்சை...! To Read, Click Here

வாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை To Read, Click Here

காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை புது டெல்லி பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மார்க், 6ஏ முகவரியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

பிற்பகல் 1 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. புதுடெல்லி மகாத்மா காந்தி மார்க், ராஷ்ட்ரிய ஸ்மிரிதி ஸ்தல் பகுதியில் யமுனா ஆற்றங்கரையில் இறுதிச் சடங்கு நடக்கிறது.

Bjp Atal Bihari Vajpayee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment