Advertisment

Cyclone Fani: ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபனி! எய்ம்ஸ் மருத்துவமனையின் கூரை பறந்தது!

Cyclone Fani Update Odisha & West Bengal : மேற்குவங்கக் கரையில் சென்று தாக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cyclone Fani Today in Odisha,

Cyclone Fani Today in Odisha, : எய்ம்ஸ் மருத்துவமனை கூரை பறந்தது.

Cyclone Fani Landfall in Odisha, West Bengal: வங்கக் கடலில் உருவான ஃபனி புயல் தமிழகத்திற்கு மழையை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே பரிசாகத் தந்துள்ளது. இந்தப் புயல் இன்று ஒடிசா வழியே கரையை கடந்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisment

175 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. முதலில் தெற்கு புரியை தாக்கும் என அறிவிக்கப்பட்டது.

Cyclone Fani Landfall : Cyclone Fani Odisha & West Bengal : ஃபனி புயல் குறித்த நேரடி தகவல்கள்!

புயல் வீசும் போது சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. புயல் கரையை கடந்த பின்னர் மீண்டும் வடகிழக்கே நகர்ந்து வலுவிழக்கும் என்றும் அதன் பின்னர் மேற்குவங்கக் கரையில் சென்று தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கடக்கும் நேரம் அறிவிப்பு! அனைத்து வித நிறுவனங்களும் மூடல்

Live Blog

Cyclone Fani Landfall Live: Cyclone Fani Odisha & West Bengal : ஃபனி புயல் குறித்த செய்திகளை பிற மொழிகளில் படிக்க.. English |Malayalam|Bengal

16:15 (IST)03 May 2019

Cyclone fani video : எய்ம்ஸ் மருத்துவமனை கூரை!

எய்ம்ஸ் மருத்துவமனையை ஃபனி புயல் தாக்கும் வீடியோவை பி.ஐ.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Video clip of a roof being blown off at the undergraduate hostel in AIIMS Bhubaneshwar due to #CycloneFani #Fani #FaniCyclone #FaniUpdates pic.twitter.com/97c5ELQJ46

— Sitanshu Kar (@DG_PIB) 3 May 2019

16:08 (IST)03 May 2019

ஃபனியின் அடுத்த டார்கெட் புவனேஷ்வர்!

ஃபனி புயல் சில மணி நேரங்களிலேயே 200 முதல் 300 மில்லி மீட்டர் வரை மழை பொழிய வாய்ப்புள்ளது. ஃபனியின் வெளிப்புறம், கொல்கத்தாவை அடையும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16:04 (IST)03 May 2019

Fani cyclone : ஃபனியின் கோரத்தாண்டவம்!

ஃபனி புயல் பூரி மாவட்டத்தில் கோரத்தாண்டவம் ஆடி வீடியோ வெளியாகியது.

15:26 (IST)03 May 2019

cyclone fani update : புயலால் 3 பேர் உயிரிழப்பு?

ஒடிசாவை தாக்கிய புயலால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

14:33 (IST)03 May 2019

Fani cyclone updates : மம்தா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது அனைத்து பிரச்சார பயணங்களையும் ரத்து செய்தார். தற்போது புயல் தொடர்பாக அங்கு அதிகாரிகளுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

13:55 (IST)03 May 2019

Fani cyclone path : மேற்கு நோக்கி ஃபனி!

ஃபனி புயல் மேற்கு வங்கம் நோக்கி புயல் நகர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தை தாக்கிய பின் இந்த புயல் வங்கதேசம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

12:09 (IST)03 May 2019

Fani cyclone updates: கரையை கடந்தது ஃபனி!

அதி தீவிர புயலான ஃபனி புயல் ஒடிஷா மாநிலம் புரி பகுதியில் கரையை கடந்தது.  காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை  ஃபனி கரையை கடக்க நேரம் எடுத்துக் கொண்டது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக மிக கனமழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:59 (IST)03 May 2019

India Met department report : இந்திய வானிலை மையம் அறிக்கை!

11:38 (IST)03 May 2019

Cyclone fani video : ஃபனியின் அலறல் வீடியோ!
11:21 (IST)03 May 2019

Fani cyclone live : 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

ஃபனி புயல் ஒடிசாவில் கரையை கட ந்து வரும் நிலையில் 2 துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு . கலிங்கப்பட்டினம், பீமுனிபட்டினம் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

11:18 (IST)03 May 2019

ஒடிசாவில் பல இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. மின்சார சேவை மற்றும் தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

10:28 (IST)03 May 2019

Fani cyclone Helplines :இலவச உதவி எண்கள்!

புபனேஷ்வர்- (0674-2303060, 2301525, 2301625)

கொர்டா ரோடு -  (0674-2490010, 2492511, 2492611)

சம்பளூர் -  (0663- 2532230, 2533037, 2532302)

விசாகப்பட்டினம் – (0891- 2746255, 1072)

பூரி- 06752-225922

பர்டாக்- 06784-230827

பெரம்ஹம்பூர்- 0680-2229632

10:23 (IST)03 May 2019

Cyclone fani video : ஒடிசாவில் ருத்ரதாண்டம் ஆடும் ஃபனி!

10:16 (IST)03 May 2019

Fani cyclone helpline : உதவி எண்கள் அறிவிப்பு!

ஃபனி புயல் பாதிப்புகளுக்கு உதவிகள் பெற 1938 என்ற உள்துறை அமைச்சகத்தின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:09 (IST)03 May 2019

Fani cyclone updates : அச்சுறுத்தும் ஃபனி!

ஃபனி புயலால் ஒடிசா மாநிலம் புரியில் 142 கி.மீ.- 174 கி.மீ. வரை காற்று வீசி வருகிறது.  கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கரையை கடந்ததில்லை கஜா, வர்தா புயல்களை விட மிக வலிமையான புயலாக ஃபோனி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

09:58 (IST)03 May 2019
09:54 (IST)03 May 2019

Fani updates : நிலச்சரிவு!

ஃபனி புயலால் மேற்கு வங்கத்தில்   நிலச்சரிவு.  நேரம் செல்ல செல்ல நிலச்சரிவு மிகவும் ஆபத்தானதாக மாறும்  என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

09:35 (IST)03 May 2019

Cyclone fani : கரையை கடக்க தொடக்கிய ஃபனி!

ஃபனி புயலானது ஒடிசா கரையை கடக்க 3 மணி நேரத்திற்கு மேலாக எடுத்துக் கொள்ளும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

09:18 (IST)03 May 2019

Cyclone fani latest : கனமழை தீவிரம்!

காலை 6 மணி நிலவரப்படி ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், இச்சாபுரம் பகுதியில் அதிகபட்சமாக 173.75 மி.மீ மழை பெய்துள்ளது. சோம்பேட்டாவில் 167 மி.மீ மழையும், மேல் பத்துபுரத்தில் 153.75 மி.மீ மழையும், கீழ் பத்துபுரத்தில் 131 மி.மீ மழையும், கவிட்டியில் 148 மி.மீ மழையும் பெய்துள்ளது.

09:12 (IST)03 May 2019

cyclone fani update : பலத்த காற்றுடன் மழை!

பூரி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

09:09 (IST)03 May 2019

மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!

முகாம்களில் மக்கள்

09:06 (IST)03 May 2019

cyclone fani updates : முகாம்களில் 7 லட்சம் பேர் தஞ்சம்!

ஒடிசாவில் இன்று ஃபனி புயலானது கரையை கடக்கவுள்ள நிலையில்,  பாதுகாப்பு நடவடிக்கையாக 7 லட்சம் பேர் வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டௌ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் தஞ்சம்

09:01 (IST)03 May 2019

Fani cyclone updates : அதிதீவிர புயலாக ஃபனி!

மே 15-ம்தேதி வரைக்கும் ஒடிசாவில் அரசு மருத்துவர்களுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுப்பில் சென்ற காவலர்கள் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். தற்காலிகமாக 880 புயல் பாதிப்பு மையங்கள் கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

08:54 (IST)03 May 2019

Train cancellations : ரயில்கள் ரத்து!

ஃபனி புயலானது இன்று ஒடிசாவின் பூரி அருகே கரையை கடப்பதால்  சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து ஒடிசா செல்லும் ரயில்கள் இன்று காலை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

08:52 (IST)03 May 2019

Cyclone fani update : நெருங்கும் ஃபனி!

ஒடிசா மாவட்டம் பூரி பகுதியில் இன்று காலை முதல் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Cyclone Fani Updates : இதனிடையே பானி புயல் கரையை கடக்கவுள்ள மாநிலங்களில் மத்திய அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், நிவாரணம், மீட்பு பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

மேலும் படிக்க. ஏப்ரல் - மே மாதங்களில் உருவாகும் புயல்களால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?

இதுபோல, மேற்கு வங்காளத்திலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுலம், பாடுகுபாடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.

Cyclone Fani Odisha, Andhra Pradesh Live Update
Cyclone Fani Odisha, Andhra Pradesh Live Update : கரையை கடக்கும் ஃபனி!

புயல் கரையைக் கடப்பதால் 10,000 கிராமங்களிலும் 52 நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டனஒடிசாவில் புயல் கரையைக் கடப்பதால் 10 ஆயிரம் கிராமங்களும், 52 நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் உச்சக்கட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். புயல் எச்சரிக்கை காரணமாக புரி கடற்கரை பகுதியில், பாதுகாப்பான இடங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி வருகின்றனர்.

"வீட்டை விட்டு வெளியே செல்கிறீர்களா?" - தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

Tamilnadu Weather Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment