scorecardresearch

FinCEN Files : நிதி மோசடி குறித்து வெளியான தகவல்கள்; விசாரணையை துரிதப்படுத்தும் அதிகாரிகள்!

இந்த கோப்பில் இடம் பெற்றிருக்கும் சில வழக்குகளை நாங்கள் விசாரித்து வருகிறோம் – அமலாக்கத்துறை

FinCEN Files — Key agencies alerted on revelations, meeting soon: black money SIT head

 Ritu Sarin

FinCEN Files — Key agencies alerted on revelations, meeting soon: black money SIT head :  இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக் குழுமம் சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர் மற்றும் பஸ்ஃபீட் செய்திகள் நிறுவனத்துடன் இணைந்து ஃபின்சென் கோப்புகளை வெளியிட்டது. இதனை மத்திய நேரடி நிதி வாரியம் மற்றும் நிதி அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு சென்று, முக்கிய உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக உச்ச நீதிமன்றத்தால், கறுப்பு பணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு திங்கள் கிழமை அன்று அறிவித்தது.

இந்த கோப்புகளில் இடம் பெற்றிருக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனம் குறித்து நிதி அமைச்சகத்தின் கீழ் இருக்கும் வருவாய் துறை மற்றும் மத்திய நேரடி நிதி வாரியத்திடம் பேசியதாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் இந்நாள் கறுப்பு பணம் சிறப்பு விசாரணைக்குழு தலைவருமான எம்.பி. ஷா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் இடம் பெற்றிருக்கும் துறைகளுக்கு சில காலம் அவகாசம் அளித்த பிறகு அகமதாபாத்தில் சிறப்பு விசாரணைக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும், அப்போது தான் இந்த விசயத்தில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்று ஷா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

சிறப்பு விசாரணைக்குழுவில் இடம் பெற்றிருக்கும் நேரடி நிதி வாரியம், அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, ரிசர்வ் வங்கி மற்றும் மற்ற குழு உறுப்பினர்களுக்கு, எப்போது ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்படும் என்று கூறினார் அவர் மேலும், முதற்கட்ட விசாரணையை அனைத்து துறையினரும் மேற்கொண்ட பிறகு தான் அடுத்த கட்டத்தை எட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறப்பு விசாரணைக்குழுவின் துணை தலைவர் மற்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அரிஜித் பஸாயத், ஷா கூறிய கருத்துகளையே முன்மொழிந்தார். ”ஷா கூறிய கருத்துகளையே நானும் முன்மொழிகின்றேன்” என்று கூறிய அவர்,” ஃபின்சென் கோப்பில் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கும் அனைத்து விவகாரங்களையும் உன்னிப்பாக கவனித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார். கறுப்பு பணம் குறித்து விசாரணை மேற்கொள்ள இந்த விசாரணை குழு மே 2014ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் உருவாக்கப்பட்டது. மோடி முதன்முறையாக ஆட்சி அமைத்த போது எடுக்கப்பட்ட மிக முக்கிய முதல் முடிவு இதுவாகும்.

கறுப்பு பண விவகாரத்தில் விசாரணை ஏற்கனவே நடந்து முடிந்திருந்தாலும், விசாராணை துவங்கப்பட்டிருந்தாலும் கூட அனைத்து விதமான விவகாரங்களையும் விசாரிக்க இந்த குழுவிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விசாரணைக்குழு சில முக்கியமான அறிக்கைகளை சமர்பித்துள்ளது. 2017ம் ஆண்டு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் கொண்டு வரப்பட்டது. அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே. மிஸ்ராவும் இந்த ஃபின்சென் கோப்புகள் தொடர்பாக தன்னுடைய கருத்துகளை கூறியுள்ளார். உலகளாவிய ஊடக விசாராணையையும், அதில் இந்தியாவின் தரப்பு விசாரணையையும் நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம் என்று அவர் அறிவித்தார். இந்த கோப்பில் இடம் பெற்றிருக்கும் சில வழக்குகளை நாங்கள் விசாரித்து வருகிறோம். மேலும் சில புதிய தகவல்கள் விவரிக்கப்பட்ட வங்கி பரிவர்த்தனைகள் மூலம் வரக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தி தொடர்பான பல்வேறு முக்கிய இணைப்புகள் உங்களுக்காக இங்கே

1. ஃபின்சென் ரகசிய ஆவணங்கள் என்றால் என்ன?

2. ஃபின்சென் ஆவணங்கள்- கிழியும் முகத்திரை, அம்பலமாகும் மோசடி நிறுவனங்கள்

3. FinCEN Files : பணமோசடி விவகாரம் … அடிபடும் ஐபிஎல் அணியின் ஸ்பான்சர் பெயர்!

4. Fincen Files : தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கிய தாவூத் இப்ராஹிமின் ஃபைனான்சியர்!

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Fincen files key agencies alerted on revelations meeting soon black money sit head