கேரளா வெள்ளம் : இடுக்கி அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் கேரளாவில் நிலை இன்னும் மோசமானதாக மாறியது. அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடிகிறது.
கேரளா வெள்ளம் : வெள்ளத்தினையும் பொருட்படுத்தாது குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய வீரர்
ஒரு பாலத்தின் உயரத்தையும் தாண்டி வெள்ள நீர் வந்து கொண்டிருந்த போது தன்னுடைய உயிரையினையும் பொருட்படுத்தாது குழந்தை ஒன்றைக் காப்பாற்றிய பாதுகாப்பு படைவீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தனியார் தொலைக்காட்சி ஒளிபதிவில் அக்காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர் அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடி வரும் காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கிறது. இதுவரை இந்த மழைக்கு 29 நபர்கள் பலியாகி உள்ளனர். சுமார் 50,000 பேர் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் தொடர் கனமழையின் காரணமாக 22 அணைகள் நிரம்பி அதன் உபரி நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. சமீபமாக இடுக்கி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் சிறுதொணி நதியில் சேர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் பயணித்தார் பினராயி விஜயன்.
கேரளா வெள்ளம் மற்றும் மழைக் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்ள
கேரளா மழை மற்றும் வெள்ளம் குறித்து தொடர்ந்து தகவல்களைப் பெற்றிட
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் பினராயி விஜயன்
இடுக்கி அணையின் மதகு திறக்கப்படும் காட்சிகளை காண
இடுக்கி அணையின் வரலாறு தெரியுமா உங்களுக்கு ?