அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று(அமெரிக்கவில் புதன்கிழமை) ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து உரையாற்றினார்.
'நான் அமெரிக்காவின் அதிபராக இருக்கும் வரையில், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது' என்ற கருத்தோடு தனது உரையைத் தொடங்கிய ட்ரம்ப், ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் எந்த அமெரிக்க படைகளும் கொல்லப்படவில்லை என்பதை மகிழ்ச்சியோடு அமெரிக்க மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
டெஹ்ரான் மோதலை அதிகரிப்பதைத் தடுக்க விரும்புவதாக தெரிகிறது என்று தெரிவித்த ட்ரம்ப்; இது நல்ல விஷயம், இந்த பதட்டத்தை தவிர்பதற்காக நினைக்கும் அனைத்து நாடுகளுக்கும் இது நல்ல விஷயம், இந்த உலகத்திற்கும் நல்ல விஷயம் என்று தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 3ம் தேதி அமெரிக்கா ட்ரோன் தாக்குதலால் ஈரான் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ பாக்த்தாத்தில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக நேற்று அதிகாலை ஈரானிய படைகள் ஈராக்கில் அமைந்திருக்கும் அமெரிக்க இராணுவத் தளங்களில் ஏவுகணைககளின் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரான்-அமெரிக்க போர்: சாத்தியம் இல்லை என்பது பதில் இல்லை
மேலும் அதிபர் ட்ரம்ப் தனது உரையில் "பெரிய இராணுவமும், துல்லியமான ராணுவ உபகரணங்களும் எங்களிடம் உள்ளன, இருப்பினும், நாங்கள் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. நாங்கள் அதைப் பயன்படுத்தவும் விரும்பவில்லை என்று கூறினார். துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர், வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, முக்கிய இராணுவ அதிகாரிகளும் அதிபர் உரையின் பொது உடனிருந்தனர்.
காசெம் சுலேமானீ மறைவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
2015ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு உலக நாடுகள் வெளியேற வேண்டும் என்று கூறிய அமெரிக்க அதிபர், நடப்பு நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் ஈரானுடன் ஒரு புதிய அனுசக்ததி ஒப்பந்தத்த்தை உருவாக்க சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் முன்வரவேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார்.
டிரம்பின் கருத்துக்களுக்கு ஈரானிய அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை. ஃபார்ஸ் செய்தி நிறுவனம் அமெரிக்க ஜனாதிபதியின் உரையை "அச்சுறுத்துவதில் இருந்து பெரிய பின்வாங்கல்" என்று விவரித்தது.
முன்னதாக, ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, லட்சக்கணக்கான ஈரானியர்கள் கூடியிருந்த கூட்டத்தில் உரையாற்றும்போது, ஈரானிய படைகளால் ஈராக்கில் நடத்தப்பட்ட தாக்குதல் மூலம் அமெரிக்க முகத்தில் பதிலடி கொடுக்கப்பட்டது என்றும் அமெரிக்க துருப்புக்கள் மத்திய கிழக்கு ஆசியப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் ஈரானிய தொலைக்காட்சி உரையில்,"இது போன்ற இராணுவ நடவடிக்கை போதுமானதாக இல்லை. பிராந்தியத்தில் அமெரிக்காவின் இருப்பை முடிவுக்குக் கொண்டுவருவது முக்கியமானது,”என்று கூறியிருந்தார்.
Explained: அணு ஆயுத ஒப்பந்த வரம்புகளை பின்பற்றுமா ஈரான் ?
ஈரான் வெளியுறவு மந்திரி ஜவாத் ஸரீஃப் தனது ட்வீட்டில் , “ஐ.நா. சாசனத்தின் 51 வது பிரிவின் கீழ் தற்காப்பு விகிதாசார நடவடிக்கைகளை ஈரான் மேற்கொண்டது .நாங்கள் போரை நாடுவதில்லை, ஆனால் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக எங்களை தற்காத்துக் கொள்வோம் என்று தெரிவித்தார்.
ஈரான் பதில் தாக்குதல் அமெரிக்க உயிரிழப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு நடத்தப்பட்டது என்று அமெரிக்க, ஐரோப்பிய அரசு வட்டாரங்கள் நம்புவதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதலுக்கு முன்னர் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒருவித ஒருங்கிணைப்பு இருந்ததாகக் கூறிவரும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகளை ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார் ஃபார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
ஈரானிய அரசு தொலைக்காட்சி புதன்கிழமை அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்க இலக்குகளை நோக்கி ஈரான் 15 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக கூறியது. ஈராக்கில் எர்பில் அல்-ஆசாத் விமானத் தளமும் மற்றொரு வசதியும் தாக்கப்பட்டதாக பென்டகன் தெரிவித்தது. ஈரானிய தொலைக்காட்சி இந்த தாக்குதலில் 80 அமெரிக்க பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறியிருந்தாலும், சான்றுகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்கா படைகள் வெளியேறுவதுதான் தீர்வு - ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி
ஜெர்மனி, டென்மார்க், நார்வே போலந்து ஆகிய நாடுகள் ஈராக்கில் உள்ள தங்கள் வீரர்கள் எவரும் காயமடையவில்லை என்று தெரிவித்துள்ளனர். பிரிட்டன் அரசும் ஈரானிய நடவடிக்கையை கண்டித்ததோடு மட்டுமல்லாமல், ஈராக்கில் இருக்கும் தனது படைகளுக்கு எந்த உயிர் சேதமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
தற்போதைய ஏவுகணைத் தாக்குதல் பதிலடி "பலவீனமானவை" என்று உச்ச தலைவரின் அலுவலகத்தில் இருந்து ஒரு அதிகாரி கூறியதாக ஈரானிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேலும், மற்ற 100 சாத்தியமான இலக்குகளை ஈரான் யோசித்துவருவதாகவும் மேற்கோளிட்டுள்ளது.
ஆனால் ஆய்வாளர்கள் ஈரான் உயர்ந்த அமெரிக்கப் படைகளுடன் வழக்கமான இராணுவ மோதலைத் தவிர்க்க விரும்புவதாகவே கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.