செலவே இல்லாத சூப்… சுகர் பிரச்னைக்கு இதை சாப்பிடுங்க!
Simple steps to make agathi keerai soup and it’s health benefits in tamil: அகத்தி கீரை ரத்த சோகையை நீக்குகிறது. சர்க்கரை நோயாளிக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.
Simple steps to make agathi keerai soup and it’s health benefits in tamil: அகத்தி கீரை ரத்த சோகையை நீக்குகிறது. சர்க்கரை நோயாளிக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.
Agathi keerai recipes in tamil: அகத்தை சுத்தப்படுத்தும் கீரைகளுக்கு முன்னோடியாக உள்ளதால் இவற்றை நாம் அகத்தி கீரை என்று அழைக்கிறோம். இந்த அற்புத கீரை வாய் புண் முதல் வயிற்றுப்புண் வரை குணப்படுத்தில் சிறந்ததாக உள்ளது. இவற்றை சின்ன வெங்காயத்துடன் சேர்த்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டு வருவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.
Advertisment
இவை ரத்தப் பித்தம், ரத்த கொதிப்பு உள்ளர்வர்களுக்கு மிகவும் நல்லது. அகத்தி கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும்.
தவிர அகத்தி கீரை ரத்த சோகையை நீக்குகிறது. சர்க்கரை நோயாளிக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. இவற்றில் வைட்டமின் சி நிரம்பி காணப்படுகிறது. இது இருதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.
Advertisment
Advertisements
இப்படி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள அகத்திக் கீரையில் எப்படி சுவையான சூப் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
அகத்திக்கீரை சூப் செய்யத் தேவையான பொருட்கள்
அகத்திக்கீரை - 1 கப் வெங்காயம் - 1 மிளகு தூள் - அரை தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
அகத்திக்கீரை சூப் செய்முறை
முதலில் அகத்திக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தொடர்ந்து, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் வைக்கவும்.
இதன் பின்னர், ஒரு பாத்திரம் எடுத்து அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
அவை கொதிக்க ஆரம்பித்ததும் அவற்றில் வெங்காயம், சீரகம், மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இவை 5 நிமிடங்களுக்கு நன்றாக கொதித்து வந்ததும், அவற்றுடன் முன்னர் கழுவி வைத்த கீரையை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இவை ஓரளவு நன்றாக சுண்டி 2 கப்பாக வற்றியதும் அவற்றை வடிகட்டிவும்.
இப்போது நீங்கள் எதிர்பாத்த சத்தான மற்றும் சுவையான அகத்திக்கீரை சூப் தயாராக இருக்கும். அவற்றை சூடாக பரிமாறி ருசிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“