Banana Health Tips: வாழைப்பழத் தோலை சாப்பிடுவது நமக்கு வினோதமாக தோன்றலாம். ஏனென்றால் நாம் எப்போதும் வாழைப்பழத் தோலை பழத்தின் தேவையற்ற பகுதியாகவே பார்க்கிறோம். வாழைப்பழத் தோலில் உள்ள மந்திரப் பண்புகளை முழுவதுமாக தெரிந்துக் கொள்ளாமல் பழத்தை சாப்பிட்ட பிறகு தோலை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விடுவோம். ஆனால் மிச்சமுள்ள பெரிய கேள்வி என்னவென்றால் நாம் வாழைப் பழத் தோலையும் சாப்பிட வேண்டுமா என்பது தான்.
banana peel benefits: 35 சதவிகிதம் பழத்தோலில் தான் உள்ளது
வாழைப்பழத்தின் 35 சதவிகிதம் பழத்தோலில் தான் உள்ளது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. பழத்தோலையும் பயன்படுத்துவதன் மூலம் நாம் உணவு கழிவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் நமது டயட்டில் சேர்த்துக் கொள்கிறோம். பழத்தோலில் அடங்கியுள்ள பிற முக்கிய ஊட்டச்சத்துக்களான பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் தேவையான amino acids ஆகியவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலைப்படுத்துவதற்கும், எலும்புகளை பாதுகாத்து உறுதிப்படுத்துவதற்கும் சிறுநீரக கற்களின் அபாயத்தை குறைப்பதற்கும் அறியப்படுகின்றன.
கணேஷ்-நிஷாவின் காதல் பரிசு...மகளை பெற்ற அப்பாக்களுக்கு தான் இந்த அட்வைஸ்!
பருவ வயதில் ஆண்/பெண்களுக்கு ஏற்படும் முகப்பருக்களுக்கு சிகிச்சையளிக்கவும் சருமத்தில் வேறு வகையான அதிசயங்களைச் செய்வதற்கும் பழத்தோல் உதவுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பழத்தோலை எவ்வாறு சாப்பிடுவது
நீங்கள் பழத்தோலை சாப்பிடுவது என்று முடிவு எடுத்துவிட்டால் நன்றாக கனிந்த ஒரு வாழைப்பழத்தின் தோலை எடுத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் அதுதான் நல்ல மெல்லியதாகவும் இனிப்பானதாகவும் இருக்கும். தோலை நன்றாக கழுவி அதை மிக்ஸியில் போட்டு நல்ல கூழாக அரைத்துக் கொள்ளவும். அதைப்போல் வாழைப்பழத்தோலை அவித்தோ, வறுத்தோ அல்லது பேக் (bake) செய்தோ கூட சாப்பிடலாம்.
குழந்தைகளின் காது கேளா தன்மையை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள்...
எதிர்மறையானது
எல்லவற்றையும் போல இதிலும் ஒரு எதிர்மறையான விஷயம் உள்ளது அதுதான் செயற்கை பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடு. இவை வாழைப்பழத்தை அதிகமாக பாதிக்காவிட்டாலும் வாழைப் பழத் தோலை கண்டிப்பாக பாதித்திருக்கும். பூச்சிக்கொல்லிகள் அதிகமாக இருக்கக்கூடிய வாழைப்பழத் தோலை உண்பதால் புற்று நோய், சர்க்கரை நோய், உயர்ந்த இரத்த அழுத்தம், autism, dementia போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.
நீங்கள் கண்டிப்பாக வாழைப்பழத் தோலை உண்ணவேண்டுமென்றால் இயற்கையாக விளைவிக்கப்பட்ட வாழைப்பழத்தை தேடி கண்டுபிடித்து அதன் தோலை உண்ணுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.