தினமும் ஒரு ஆப்பிள்… இவ்வளவு பயன் இருக்கு பாருங்க…!

Amazing and top Health Benefits of Apples in tamil: இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

Benefits of Apples in tamil: eating an apple a day benefits tamil

Benefits of Apples in tamil: குளிர்காலத்தில் கிடைக்கும் பழ வகைகளில் முக்கியாமான ஒரு பழமாக ஆப்பிள் உள்ளது. இவற்றில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது. ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். 

ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கிறது

நாம் தினமும் ஒரு சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தடுக்கப்படுகின்றன. 

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கழிவுகளை எளிதில் மலக்குடல் வழியாக வெளியேற்றுபவையாக உள்ளன. எனவே, நீங்கள் தினந்தோறும் ஒரு  ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு மலச்சிக்கலே ஏற்படாது. 

புற்றுநோயைத் தடுக்கிறது

ஆப்பிள் புற்றுநோயைத் தடுப்பதில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும் சக்தியுள்ளதாக இவை உள்ளன. 

நீங்கள் புற்றுநோய் வரக்கூடாது என்று நினைப்பவராக இருந்தால், தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிடுங்கள். ஏனெனில் தோலில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

பாக்டீரியாக்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

நம்முடைய உடலிலேயே நல்ல பாக்டீரியாக்கள் வாழும் பகுதி குடல் தான். நாம் அன்றாட ஆப்பிள்களை சாப்பிட்டு வருவதால், அவை  நமது பெருங்குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது 

மேலும், இவை உடலில் மெட்டபாலிசத்தை தூண்டுவதோடு, பாக்டீரியாக்களை சமநிலையில் பராமரித்து, உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிகம் உறிஞ்ச செய்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. 

இரத்த சோகை சரிசெய்கிறது

ஆப்பிள்களில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இவை இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிப்பதன் மூலம், இரத்த சோகையைத் தடுக்கிறது. இதனால், உறுப்புக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைத்து, உறுப்புக்களும் நன்கு செயல்படுகின்றன.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது 

சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். ஆப்பிளில் உள்ள பாலிஃபீனால்கள், உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுக்களை உடல் உறிஞ்சுவதைக் குறைக்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவில் ஏற்றஇறக்கம் ஏற்படுவதும் குறைகிறது.  

மேலும், இவை க்ளுக்கோஸ் உறிஞ்சுவதையும் குறைக்கவும், கணையத்தில் இருந்து இன்சுலின் வெளியீட்டையும் தூண்டிவிட்டு, இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கவும் உதவுகிறது. 

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது

ஆப்பிள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோயை எதிர்த்துப் போராடும் வலிமையை உடலுக்கு அளிக்கிறது. 

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டியது அவசியமாகும். 

இவற்றின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டான க்யூயர்சிடின், இரத்த நாளங்களில் உள்ள அழற்சியைக் குறைக்க உதவுகின்றன.

ஒளிரும் சருமத்தை பெற உதவுகிறது 

ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சரும செல்களை புத்துயிர் பெறச் செய்கின்றன. மேலும், சருமத்திற்கு கூடுதல் பொலிவு அளிக்கவும் உதவுகின்றன. எனவே, ஒளிரும் சருமம் பெற நினைப்பவர்கள், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Benefits of apples in tamil eating an apple a day benefits tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express