scorecardresearch

இம்யூனிட்டி முதல் எடை குறைப்பு வரை… வெதுவெதுப்பான நீருடன் கொத்தமல்லி சாப்பிட்டுப் பாருங்க!

kothamalli benefits in tamil: காலையில் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது சரியான ஆரோக்கியமான சருமத்தை பெற உதவும்.

இம்யூனிட்டி முதல் எடை குறைப்பு வரை… வெதுவெதுப்பான நீருடன் கொத்தமல்லி சாப்பிட்டுப் பாருங்க!

Benefits of Coriander in tamil: கொத்தமல்லி அல்லது தனியா என்று அழைக்கப்படும் இந்த மூலிகை பொருள் இந்திய உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவை இல்லாமல் எந்த இந்திய சமையலறையையும் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நிச்சயமாக கூறலாம். ஒரு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ள இந்த கொத்தமல்லி ஒவ்வொரு உணவுக்கு சுவை கூட்டும். அதன் சுவை தவிர, இது மருத்துவ குணங்களால் நிரம்பியுள்ளது மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

சரி, இப்போது கொத்தமல்லி நீரின் ஆரோக்கியமான நன்மைகள் என்னென்ன உள்ளது என்று பார்க்கலாம்.

நச்சுக்களை வெளியேற்றும்:

கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனால் இவை நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது உடலை நச்சுத்தன்மை இல்லாமல் இருக்க உதவுகிறது.

எடை இழப்பை அதிகரிக்கிறது:

கொத்தமல்லியில் மிகப்பெரிய செரிமான பண்புகள் உள்ளன. இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.

ஆரோக்கியமான முடி:

கொத்தமல்லியில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளதாக அறியப்படுகிறது. இவை அனைத்தும் முடியின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது முடி உதிர்தலை எதிர்த்துப் போராட உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

கொத்தமல்லி ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்தது. மேலும், இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவுகின்றன.

முகப்பரு, நிறமி மற்றும் தழும்புகளை குறைக்கிறது:

கொத்தமல்லியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. காலையில் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது சரியான ஆரோக்கியமான சருமத்தை பெற உதவும்.

கொத்தமல்லி நீர் எப்படி தயார் செய்வது?

கொத்தமல்லி நீரை தயாரிக்க, 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை 1 கப் குடிநீரில் சேர்த்து இரவு முழுதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் விதைகளை வடிகட்டி வெறும் வயிற்றில் தண்ணீரை பருகி மகிழவும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Benefits of coriander in tamil health benefits of coriander water in tamil

Best of Express