Advertisment

இதை கொதிக்க வைத்து… ஊளைச் சதைக்கு எளிய தீர்வு!

Horse Gram health benefits in Tamil: உணவில் கொள்ளு பருப்பை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைத்திட முடியும்.

author-image
WebDesk
Apr 03, 2022 07:11 IST
இதை கொதிக்க வைத்து… ஊளைச் சதைக்கு எளிய தீர்வு!

பல வகையான சிறுதானியங்கள் நமது நாட்டில் அதிகம் விளைவிக்கப்பட்டு மக்களால் உண்ணப்படுகின்றன. அதில் மிகப் பிரபலமான ஒரு சிறுதானியம் கொள்ளு. இந்தக் கொள்ளு பெரும்பாலும் குதிரைகளுக்கு உணவாக கொடுக்கப்படுவது என்பதே பலரும் அறிவார்கள். ஆனால், மருத்துவ குணங்கள் நிறைந்த கொள்ளு மனிதர்கள் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனால், நமக்கு ஏற்படும் நன்மைகள் இச்செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

கொள்ளுப் பருப்பில் அதிகளவு மாவுச்சத்து உள்ளதால், அதை ஊற வைத்து அல்லது வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளுப் பருப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்தினால், ஜலதோஷம், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய் போன்றவற்றை குணமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஊளைச்சதையை குறைக்கும் திறன் கொள்ளுப் பருப்பிற்கு உள்ளது. அதை ஊற வைத்து, அந்நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்

உடல் எடையைக் குறைக்க உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டால் உடல் எடையை குறைத்திட முடியும்.

கொள்ளு சூப் சளியைப் போக்கும் குணம் வாய்ந்தது. எனவே, குழந்தைகளுக்கு சளி பிடித்தால், கொள்ளு சூப் வைத்துக் கொடுக்கலாம்

கொள்ளுப் பருப்பை அரைத்துப் பொடியாக்கி ரசத்தில் போட்டு உட்கொண்டால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Health Benefits #Healthy Food Tips #Health Tips #Healthy Life #Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment