Bitter Gourd recipe in tamil: காய்கறி வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக பாகற்காய் உள்ளது. இந்த அற்புதமான காய்கறி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட மறுக்கும் காய்கறிகளில் ஒன்றாகவும் உள்ளது. ஏனென்றால் இவற்றில் உள்ள கசப்புத்தன்மையை யாரும் அதிகம் விரும்புவதில்லை. ஆனால், இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகின்றன.
பாகற்காய் மருத்துவப் பயன்கள்
பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இது கணைய உண்டாகும் புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பாகற்காயையோ, அல்லது அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை வெளியேற்றும். இவற்றில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.
பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-பி என்ற வேதிப்பொருள் இன்சுலினாக செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. மேலும், இவற்றில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

இது உணவுப் பையிலுள்ள பூச்சிகளை கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. அதோடு இது பாகற்காய் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். தவிர, பாகற்காயை, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.
இப்படி எண்ணற்ற மருத்துவ மற்றும் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள பாகற்காயை கசப்பே இல்லாமல் சமைக்க என்ன வழி என்று இங்கு பார்க்கலாம்.
கசப்பு இல்லாமல் பாகற்காய் சமைக்க வழிகள்:
உரிக்கப்பட்டு நறுக்கப்பட்ட பாகற்காய் துண்டுகளில் உப்பு சேர்த்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்னர், அவற்றை நன்கு அலசி தண்ணீர் விட்டு மீண்டும் அலசி எடுத்துக்கொள்ளவும். இப்போது சமைத்து ருசிக்கவும்.
பாகற்காயை தயிர், சர்க்கரை மற்றும் எலுமிச்சை கலவையுடன் கலந்து ஊற வைத்து வறுக்கவும். குழந்தைகள் நிச்சயம் அதிகம் விரும்புவார்கள்.
உப்பு, மஞ்சள், புளி மற்றும் நாட்டு சர்க்கரையின் கலவையை உரிக்கப்பட்டு, துருவிய மற்றும் நறுக்கப்பட்ட கசப்பான பாகற்காய் மீது தடவவும். சில நிமிடங்கள் கழித்து கழுவி பின்னர் சமைக்கவும்.

கசப்பான பாகற்காயை அதன் ஊட்டச்சத்து மதிப்புக்காக நீங்கள் உட்கொள்ள விரும்பினால், அதை ஜூஸரில் பாப் செய்து பேரிக்காய், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் இனிப்புக்காக சேர்க்கவும். தேன், வெல்லம் அல்லது இஞ்சியையும் சேர்த்து சுவையாக செய்யலாம்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil