benefits of soaked raisins for weight loss in tamil: கிஸ்மிஷ் என்றும் அழைக்கப்படும் உலர் திராட்சை பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இவை புற்றுநோயை எதிர்க்கின்றன, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன மற்றும் குடல் இயக்கத்தை மேம்படுத்துகின்றன. மேலும் இது கீல்வாதம் போன்ற அழற்சி எதிர்ப்பு கோளாறுகளைக் கட்டுப்படுத்துகின்றன.
இப்படியாக ஏரளமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ள இந்த அற்புத உலர் திராட்சை எடை இழப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்றாக உள்ளது. இந்த உலர் பழங்களை சரியான முறையில் மற்றும் சரியான அளவு சாப்பிட்டு வந்தால் நீங்கள் நல்ல பலனை அனுபவிக்கலாம்.

அளவாக உட்கொள்ளுங்கள்
உலர் திராட்சைகள் உடல் எடையை குறைக்க உதவும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால் இவற்றில் அதிகமான கலோரிகள் காணப்படுவதால் இவற்றை அளவாக உட்கொள்ள வேண்டும்.
உலர் திராட்சையில் உள்ள நார்ச்சத்து பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையதாகவும் உள்ளது.
ஒரு நாளைக்கு எத்தனை உலர் திராட்சை சாப்பிட வேண்டும்?
பெண்கள் ஒரு சிறிய கப் உலர் திராட்சையை (15-20 கிஸ்மிஷ்) உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் ஆண்கள் ஒரு நாளைக்கு 1.5 கப் வரை உட்கொள்ளலாம்.
இரவில் ஊறவைத்து மட்டுமே சாப்பிடுங்கள்

உலர் திராட்சையை பச்சையாக சாப்பிடுவதை விட, அவற்றை இரவு முழுதும் ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமான வழியாகும். கோடையில் நீங்கள் உட்கொள்ளும் பல உலர் பழங்களைப் போலவே, 15-20 உலர் திராட்சைகளை ஒரே இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அவற்றைச் சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்கலாம்.
உலர்திராட்சையை ஒரே இரவில் ஊறவைத்தால் என்ன நடக்கும்? தேவையற்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் தண்ணீரில் கரைந்து, உடலில் விரைவாக உறிஞ்சப்படுவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை மட்டுமே வைத்திருக்கின்றன.

இரவில் ஊறவைத்த திராட்சையை உட்கொள்வது உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கிறது. இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. இரும்புச்சத்து நிறைந்த திராட்சை, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இரத்த சோகையை போக்கவும் உதவுகிறது.
கொதிக்க வைத்த உலர் திராட்சை தண்ணீரை பருகவும்
உலர் திராட்சை நீர் உடல் எடையை குறைக்கவும், அதே நேரத்தில் உங்கள் உடலை ஹைட்ரேட் செய்யவும் மற்றொரு வழியாகும். இரண்டு கப் தண்ணீரில் 150 கிராம் திராட்சையை கொதிக்க வைத்து, ஆற வைத்து பருகி வரலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“