Advertisment

உடல் எடையை குறைக்க உதவும் ராகி ஆப்பம்; 10 நிமிசத்துல சட்டுனு ரெடியாகிடும்

Kelvaragu Appam in tamil: கேழ்வரகு ஆரோக்கியமான எலும்புகளைப் பெறுவதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் நீரிழிவு நோயைக் குணப்படுத்தற்கும் உதவுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Breakfast Recipe Tamil: Ragi Appam Recipe in Tamil

Breakfast Recipe Tamil: ராகி அல்லது கேப்பை என்று அழைக்கப்படும் கேழ்வரகு ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு உணவு பொருள் ஆகும். இவை தமிழகத்திலும், நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் அதிகப்படியாக சாகுபடி செய்யப்படுகின்றன.

Advertisment

கேழ்வரகு ஆரோக்கியமான எலும்புகளைப் பெறுவதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் நீரிழிவு நோயைக் குணப்படுத்தற்கும் உதவுகின்றன. இவை ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதோடு ரத்த சோகையைக் குணப்படுத்தவும் உதவுகின்றன.

மேலும், சோர்வைப் போக்கவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தவும் இவை உதவுகின்றன. இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ள கேழ்வரகில் ராகி ஆப்பம் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

ராகி ஆப்பம் செய்யத் தேவையான பொருட்கள்

கேழ்வரகு - 1 கப்
துருவிய தேங்காய் - 3/4 கப்
சாதம் - 1/4 கப்
ஈஸ்ட் - 1/4 டீ ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

ராகி ஆப்பம் செய்முறை

ஒரு வெறும் பாத்திரம் எடுத்து அதில் ராகி மாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு மிக்சி எடுத்து அதில் துருவிய தேங்காய், வடித்த சாதம், நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து வறுத்த ராகி மாவையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

இதன் பிறகு நன்கு மைய அரைத்த இந்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும். பின்னர், ஈஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். இவற்றை ஒரு மூடி வைத்து மூடி 6 முதல் 8 மணிநேரத்திற்கு தனியாக ஒரு இடத்தில் மாவு புளிக்க வைத்துக்கொள்ளவும்.

இப்போது மாவு புளித்தவுடன், ஒரு ஆப்பம் பாத்திரம் எடுத்து அதில் மாவு ஊற்றி தோசை சுடவும். தோசையின் மேற்புறத்தில் நெய் அல்லது எண்ணெய் விட்டு பிரட்டி எடுக்கவும்.

நீங்கள் தாயார் ஆப்பத்துடன் சட்னி அல்லது தேங்காய் பால் சேர்த்து ருசித்து மகிழவும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Healthy Food Health Benefits Tamil Food Recipe Healthy Breakfast Recipe Tamil Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment