Breakfast Recipe Tamil: ராகி அல்லது கேப்பை என்று அழைக்கப்படும் கேழ்வரகு ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு உணவு பொருள் ஆகும். இவை தமிழகத்திலும், நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் அதிகப்படியாக சாகுபடி செய்யப்படுகின்றன.
Advertisment
கேழ்வரகு ஆரோக்கியமான எலும்புகளைப் பெறுவதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் நீரிழிவு நோயைக் குணப்படுத்தற்கும் உதவுகின்றன. இவை ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதோடு ரத்த சோகையைக் குணப்படுத்தவும் உதவுகின்றன.
மேலும், சோர்வைப் போக்கவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தவும் இவை உதவுகின்றன. இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ள கேழ்வரகில் ராகி ஆப்பம் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
ராகி ஆப்பம் செய்யத் தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
கேழ்வரகு - 1 கப் துருவிய தேங்காய் - 3/4 கப் சாதம் - 1/4 கப் ஈஸ்ட் - 1/4 டீ ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை - 1 டீ ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
ராகி ஆப்பம் செய்முறை
ஒரு வெறும் பாத்திரம் எடுத்து அதில் ராகி மாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு மிக்சி எடுத்து அதில் துருவிய தேங்காய், வடித்த சாதம், நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து வறுத்த ராகி மாவையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
இதன் பிறகு நன்கு மைய அரைத்த இந்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும். பின்னர், ஈஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். இவற்றை ஒரு மூடி வைத்து மூடி 6 முதல் 8 மணிநேரத்திற்கு தனியாக ஒரு இடத்தில் மாவு புளிக்க வைத்துக்கொள்ளவும்.
இப்போது மாவு புளித்தவுடன், ஒரு ஆப்பம் பாத்திரம் எடுத்து அதில் மாவு ஊற்றி தோசை சுடவும். தோசையின் மேற்புறத்தில் நெய் அல்லது எண்ணெய் விட்டு பிரட்டி எடுக்கவும்.
நீங்கள் தாயார் ஆப்பத்துடன் சட்னி அல்லது தேங்காய் பால் சேர்த்து ருசித்து மகிழவும்.