Carom Seeds benefits in tamil: கேரம் விதைகள் அல்லது அஜ்வைன்அல்லது ஓமம் விதைகள் அஜீரணம் மற்றும் வாயுத் தொல்லையைக் குணப்படுத்துவதில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், இவை அஜீரணத்தை மேம்படுத்துவதை விட இன்னும் பல அதிக நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் இருந்து நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது வரை பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ளன.
ஓமம் விதைகள் பொதுவாக காரமான சுவை கொண்டவை. வாயு மற்றும் அஜீரணத்திற்கு சிகிச்சையளிக்க, நீங்கள் அரை டீஸ்பூன் ஓம விதைகளை ஒரு சிட்டிகை உப்புடன் மென்று சாப்பிட வேண்டும். வெதுவெதுப்பான நீரை அருந்தினால் சில நிமிடங்களில் வாயு குறையும்.
இந்த அற்புத மூலப்பொருள் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இங்கு பார்க்கலாம்.
ஓம விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்:-
வாயு பிரச்சனையைத் தவிர, அசிடிட்டி, வாய்வு மற்றும் வீக்கம் ஆகியவற்றிலிருந்தும் நிவாரணம் பெற ஓம விதைகள் உதவும். என தனது சமீபத்திய பதிவில் லைஃப்ஸ்டைல் பயிற்சியாளர் லூக் குடின்ஹோ குறிப்பிட்டுள்ளார்.
- சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஓம விதைகள் சிறந்தது
உணவுக்குப் பிறகு ஓம விதை தேநீர் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று குடின்ஹோ தெரிவிக்கிறார்.
ஓம விதை தேநீர் தயாரிக்க, உங்களுக்கு ஒரு டீஸ்பூன் ஓம விதை, ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் நான்கில் ஒரு பங்கு இலவங்கப்பட்டை தூள் தேவை.
இந்த பொருட்கள் அனைத்தையும் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து தேநீராக காய்ச்சவும். நீங்கள் சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு இதை உட்கொள்ளுங்கள். "இந்த தேநீரை பருகுவதால் மக்கள் தங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாகக் கூறப்படுகிறது," என்று குடின்ஹோ குறிப்பிட்டுள்ளார்.
- இது அஜீரண பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்
அசிடிட்டி, வாயு மற்றும் வீக்கம் மட்டுமல்ல, ஓம விதைகள் வயிற்று வலியைப் போக்க உதவும். இவற்றை மென்று சாப்பிடுவது அமிலத்தன்மையை குறைக்க உதவும்.
- இது செரிமானத்தை மேம்படுத்தும்
ஓம விதைகளை தண்ணீரில் கொதிக்க வைப்பது நமது உணவை உடைக்க அதிக செரிமான நொதிகள் மற்றும் வயிற்று அமிலங்களை சுரக்க உதவும்.
இதற்கு ஒரு டீஸ்பூன் அஜ்வைன் விதைகளை கொதிக்கும் நீரில் சேர்க்கவும். ஓம விதைகளின் காரமான மற்றும் சற்று காரமான சுவை காரணமாக மெல்ல கடினமாக இருப்பவர்களுக்கு இது குறிப்பாக உதவியாக இருக்கும்.
ஓம விதைகள் (1/2 டீஸ்பூன்), ஜீரா (1 டீஸ்பூன்) மற்றும் சாஃப் (1 டீஸ்பூன்) ஆகியவற்றை தண்ணீரில் கலந்து சேமித்து வைக்கவும். இந்த கலவையை குடிப்பது உங்கள் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இது உங்கள் வயிற்று அமிலங்கள் மற்றும் செரிமான அமைப்பை தளர்த்தி, குறைந்த வாயு மற்றும் வாய்வு சுரக்க உதவுகிறது. இது உங்கள் குடல் சுவர்களுக்கு மிகவும் நிதானமாகவும் இருக்கிறது.
- குழந்தைகளின் பெருங்குடல் வலிக்கு இவை நன்மை பயக்கும்
உங்கள் பிள்ளைக்கு வயிற்று வலி (காற்று அல்லது குடலில் அடைப்பு போன்றவற்றால் அடிவயிற்றில் கடுமையான வலி மற்றும் குறிப்பாக குழந்தைகளால் அவதிப்பட்டால்), நீங்கள் அவர்ளுக்கு ஓம தண்ணீர் அல்லது சில ஓம விதைகளை மெல்ல கொடுக்கலாம்.
- குடற்புழு நீக்கம் செய்ய உதவும்
ஓம விதைகளை (1 டீஸ்பூன்) சிறிது வெல்லத்துடன் (1 டீஸ்பூன்) கலக்கவும். இந்த கலவையானது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை குடற்புழு நீக்கத்திற்கான ஒரு பொதுவான தீர்வாகும். வெல்லம் புழுவை வெளியே வர ஈர்க்கிறது மற்றும் ஓம விதை வயிற்று அமிலத்துடன் கலந்து புழுக்களை அழிக்க உதவுகிறது.
- ஆஸ்துமா உள்ளவர்களுக்கு உதவலாம்
ஓம விதை டீயுடன் தேன் சேர்த்து ஆஸ்துமா அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இது இருமல் மற்றும் நெரிசலைக் குறைக்க உதவும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
ஓம விதைகளில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.